ரவை, கோதுமை மாவு வைத்து இப்படி தோசை செய்யுங்க. சில மணி நேரம் புளிக்க வைத்தாலே போதுமானது.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
கோதுமை மாவு - ¼ கப்
தயிர் - ½ கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு
பழ உப்பு (Eno) அல்லது சமையல் சோடா - -¼ தேக்கரண்டி
சாம்பார் மசாலா
கொத்துமல்லி தழை
பச்சை வெங்காயம்
செய்முறை: ரவை, கோதுமை மாவு, தயிர், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு மாவில் கலக்கவும். மாவின் தன்மை பொறுத்து தண்ணீரைச் சேர்க்கவும். மாவு ரெடியானதும் அரை மணி நேரம் அப்படியே விடவும்.
2பின்னர், விரைவான நொதித்தலுக்கு, பழ உப்பு (Eno) அல்லது பேக்கிங் சோடா சேர்க்கவும். மாவை 5-6 மணி நேரம் விட்டுவிட்டு இயற்கையான முறையிலும் நொதித்தலுக்கு (புளிக்க) வைக்கலாம். பிறகு, சூடான, நெய் தடவிய பாத்திரத்தில் மாவை ஊற்றி தோசை செய்யலாம். மேலே சிறிது சாம்பார் மசாலா, கொத்தமல்லி தழை மற்றும் பச்சை வெங்காயம் தூவி, மடித்து, எடுத்தால் சுவையான தோசை ரெடி.