Beauty tips in tamil: make Homemade aloe vera gel with this simple steps
செரிமான அமைப்பை மேம்படுத்துவதில் இருந்து சருமத்திற்கு ஊட்டமளிப்பது வரை, கற்றாழை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது, இது டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது.
Advertisment
இப்போது கற்றாழை பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது, அதில் மிகவும் பிரபலமானது கற்றாழை ஜெல்.
ஆனால் எல்லா தயாரிப்புகளையும் போல, இப்போது கற்றாழை ஜெல்லில் கூட கலப்படம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
உங்கள் வீட்டில் கற்றாழை செடி இருக்கிறதா? இனி கவலை எதுக்கு? இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி நீங்களே சொந்தமாக கற்றாழை ஜெல் தயாரிக்கலாம்.
Advertisment
Advertisements
எப்படி?
முதலில், உங்கள் கைகளையும், கற்றாழை ஜெல் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். அதன்படி, கற்றாழை, ஒரு ஆழமான கிண்ணம், ஒரு கத்தி, ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு கண்ணாடி ஜாடி ஆகியவற்றைக் கழுவவும்.
இப்போது, கற்றாழையின் அடிப்பகுதியில்’ இலைகளை வெட்டுங்கள். ஏனெனில் மிகவும் பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் அடித்தளத்திற்கு அருகில் காணப்படுகின்றன, அதில் ஆரோக்கியமான ஜெல் நிறைய உள்ளன.
வெட்டப்பட்ட பிறகு, அதிலிருந்து அடர் மஞ்சள் நிறத்தில் பிசின் வெளியேறுவதை நீங்கள் காண்பீர்கள். பிசின் வடிகட்ட’ இலைகளை ஒரு கண்ணாடிக்குள் 10-15 நிமிடங்கள் வைக்கவும். நிபுணர்களின் கூற்றுப்படி, பிசினில்’ லேடெக்ஸ் (latex) உள்ளது, இது சருமத்தை எரிச்சலூட்டுகிறது.
பிசின் வடிகட்டியவுடன், கத்தி, பீலர் பயன்படுத்தி’ இலைகளை உரித்து’ ஒரு ஸ்பூன் அல்லது கத்தியால் ஜெல்லை வெளியே எடுத்து’ சுத்தமான கண்ணாடி ஜாடியில் வைக்கவும். கற்றாழை ஜெல் ரெடி.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான இலைகளை வெட்ட வேண்டாம், செடி இளமையாக இருந்தால், அதிக பட்சம் ஒரு இலை அல்லது இரண்டை மட்டும் வெட்டுங்கள், அதற்கு மேல் வெட்டினால் செடிக்கு சேதம் ஏற்படும். அலோ வேரா ஜெல்லை நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பது ஆபத்தானது.
ஜெல்லின் ஆயுளை அதிகரிக்க, வைட்டமின் சி பவுடர் போன்ற இயற்கைப் பாதுகாப்பை நீங்கள் அதில் சேர்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “