உணவுகளில் கோபி மஞ்சூரியன் ரெசிபிதான் மிகவும் பேமஸ். இந்நிலையில் இதை நாம் வீட்டிலேயே செய்ய முடியும். இதன் ஈசி ரெசிபியை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
200 கிராம் காலிஃபிளவர்
பொறிக்கும் அளவு எண்ணெய்
100 கிராம் மைதா மாவு
40 கிராம் கார்ன் ஸ்டார்ச்
25கிராம் சிவப்பு மிளகாய் பொடி
20 கிராம் மிளகுப் பொடி
20 கிராம் உப்பு
50 எம் எல் தண்ணீர்
மஞ்சூரியன் சாஸ் செய்யத் தேவையான பொருட்கள்
20 கிராம் பூண்டு நறுக்கியது
20 கிராம் இஞ்சி நறுக்கியது
10 பச்சை மிளகாய் நறுக்கியது
30 கிராம் வெங்காயம் நறுக்கியது
50 கிராம் குடைமிளகாய் நறுக்கியது
15 எம். எல் சோயா சாஸ்
30 எம். எல் சிவப்பு சில்லி சாஸ்
10 எம் எல் வினிகர்
5கிராம் வெள்ளை பெப்பர்
10 கிராம் உப்பு
20 எம் எல் எண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் மாவு, ஸ்டார்ச், மிளகாய் பொடி, மிளகு பொடி, உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். தொடர்ந்து இதில் காலிஃபிளவர் சேர்த்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், குடை மிளாகாய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர் சேர்த்து கிளரவும். வெள்ளை பெப்பர், உப்பு சேர்த்து கிளரியதும் பொறித்த காலிஃபிளவரை சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“