மேக்கப் என்பது பலரின் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாகிவிட்டது, இது ஒருவரின் சருமத்திற்கு பளபளப்பைச் சேர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களின் அம்சங்களை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், மேக்கப் பிரியர்கள் நேரத்தை மிச்சப்படுத்த பல்வேறு தந்திரங்களை பரிசோதித்து மகிழ்கின்றனர். இருப்பினும், இந்த வைரல் ஹேக்ஸ் சில நல்லதை விட, அதிக தீங்கு விளைவிக்கும், மேலும் நீண்ட காலத்திற்கு உங்கள் சருமத்தை சேதப்படுத்தும்.
Advertisment
எனவே, உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில பிரபலமான மேக்கப் ஹேக்ஸ் குறித்து டாக்டர் ஆஞ்சல் பந்த் பகிர்ந்து கொண்டார்.
நாம் அனைவரும் எளிதான மேக்கப் ஹேக்ஸ் மற்றும் மல்டி-பர்போஸ் தயாரிப்புகளை விரும்புகிறோம், ஆனால் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில ஹேக்ஸ் உள்ளன என்று ஆஞ்சல் கூறினார்.
கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும் லிப் லைனரில், லாங் லாஸ்டிங் பிக்மென்ட் இருப்பதால், இந்த ஹேக் செய்வதைத் தவிர்க்குமாறு நிபுணர் அறிவுறுத்தினார். ஸ்கின் ஹைப்பர் பிக்மென்ட்டுடன் கரு வளையங்கள் இருந்தால் காஜலைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துங்கள், என்று அவர் பரிந்துரைத்தார்.
லிப்ஸ்டிக்கை ப்ளஷ் ஆக பயன்படுத்துதல்
இந்த வைரல் ஹேக்ஸ் நீண்ட காலத்திற்கு உங்கள் சருமத்தை சேதப்படுத்தும்
பெரும்பாலான மேக்கப் பிரியர்கள், லிப்ஸ்டிக்கை ப்ளஷ் ஆக பயன்படுத்துகின்றனர், இருப்பினும், அடர் வண்ண லிப்ஸ்டிக் அல்லது லிக்குவைட் மேட் லிப்ஸ்டிக், ஒரு ப்ளஷ் ஆக பயன்படுத்தக்கூடாது என்று நிபுணர் எச்சரித்தார், ஏனெனில் அவை உதடுகளுக்கான darker pigment கொண்டிருக்கின்றன. இது ஏற்கனவே உள்ள புள்ளிகளை கருமையாக்கும், இது பரிந்துரைக்கப்படவில்லை.
அதற்கு பதிலாக ஒரு பவுடர் ப்ளஷ் அல்லது லைட்-கலர் கிரீம் ப்ளஷ் பயன்படுத்தவும், இது எளிதில் பிளென்ட் ஆகும். light-coloured cheek tint பயன்படுத்த சரியானது.
புருவங்களில் சோப்பு பயன்படுத்துவது
புருவங்கள் அடர்த்தியாகவும், எடுப்பாகவும் தெரிய சிலர் சோப்பை பயன்படுத்துகின்றனர், ஆனால் இப்படி செய்வதால்,அவை விழும் அளவுக்கு பலவீனமாகிவிடும் என்பதால், இந்த ஹேக்கைத் தவிர்க்க நிபுணர் பரிந்துரைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“