‘வாசனை பிடிக்கும்... ஆனால் குடிக்க மாட்டேன்’; காபி, டீக்குப் பதில் தண்ணீர், மோர், இளநீர்; நடிகை மலைகா அரோரா சீக்ரெட்!

பிரபலமான பானங்களை குடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று மலைக்கா அரோரா கூறியுள்ளார். மேலும், “நான் வளரும்போது எப்போதும் பால் பிடிக்கும்” என்று மலைக்கா அரோரா தெரிவித்துள்ளார்.

பிரபலமான பானங்களை குடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று மலைக்கா அரோரா கூறியுள்ளார். மேலும், “நான் வளரும்போது எப்போதும் பால் பிடிக்கும்” என்று மலைக்கா அரோரா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Malaika Arora

பிரபலமான பானங்களை குடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று மலைக்கா அரோரா பகிர்ந்து கொள்கிறார். Photograph: (Photo: Malaika Arora/Instagram)

நடிகை மலைகா அரோரா, தான் ஏன் காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்த்து, தண்ணீர், மோர், இளநீர் அருந்த விரும்புகிறார் என்பது குறித்துப் பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில், நடிகை சோஹா அலி கான் மற்றும் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் ஆகியோருடன் அவர் இதுபற்றிப் பேசினார்.

ஆங்கிலத்தில் படிக்க:

காபி, டீ வேண்டாம்:

Advertisment

“நான் காபி, டீ அருந்துபவள் அல்ல. வளர்ந்ததிலிருந்தே பால் அருந்துவதையே விரும்புகிறேன். காபி, டீ அருந்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை,” என்று மலைகா கூறினார். “காலை எழுந்தவுடன் எனக்கு காபி தேவைப்படாது. அதற்குப் பதிலாக, இளநீர் அல்லது ஒரு கிளாஸ் மோர் அருந்துவேன். மற்றவர்கள் ஏன் அருந்துகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் எனக்கு இந்தப் பானங்கள் ஒத்துப்போகவில்லை,” என்றும் அவர் கூறினார்.

அனுபவம் சொல்வது என்ன?

“நான் காபி, டீயை முயற்சிக்கவில்லை என்று அர்த்தமல்ல, முயற்சித்திருக்கிறேன். ஆனால் அவை எனக்கு ஒத்துவரவில்லை. காபி குடித்தால் எனக்கு அசெளகரியமாக இருக்கும். அதன் சுவை வினோதமாக இருக்கும், மேலும் என் வயிறு வினோதமாக உணர்ந்தது. அதனால் அவை எனக்குச் சரிவராது என்று முடிவு செய்தேன். காபியின் வாசம் எனக்குப் பிடிக்கும், ஆனால் என்னால் அதைக் குடிக்க முடியாது. எனவே ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்,” என்று 51 வயதான மலைகா கூறினார்.

நிபுணர் கருத்து:

டீ, காபி ஆரோக்கியத்திற்கு அவசியமா?

தேவையா இல்லையா என்ற கேள்விக்கு, கேஐஎம்எஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் அமரீன் ஷேக், “ஆரோக்கியமான வாழ்க்கைக்கு டீ, காபி அவசியமில்லை” என்று கூறினார். “அவற்றில் உள்ள காஃபின் உடனடி ஆற்றலை அளிக்கிறது. இந்த பானங்களை ஒருவர் குடிக்க விரும்பவில்லை என்றால், அவர் எந்த அத்தியாவசியமான ஊட்டச்சத்தையும் இழக்கவில்லை. தண்ணீர், இளநீர், மோர் அல்லது பால் குடிப்பதன் மூலமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

காபி, டீ குடிக்காமல் இருந்தால் ஆற்றல் குறையுமா?

Advertisment
Advertisements

“அப்படியில்லை” என்று ஷேக் கூறினார். “காலையில் ஏற்படும் புத்துணர்ச்சி காஃபினால் வருகிறது. உங்கள் உடல் காஃபினை நம்பியிருக்கவில்லை என்றால், உங்களுக்கு அது தேவைப்படாது. நல்ல தூக்கம், சமச்சீரான உணவு, மற்றும் நீர்ச்சத்து ஆகியவை இயல்பாகவே ஆற்றலை அதிகரிக்கும். காஃபின் அருந்தாதவர்கள் ஒரு நாளைக்குச் சீரான ஆற்றல் அளவைக் கொண்டிருப்பார்கள்,” என்றும் அவர் கூறினார்.

காபி, டீயை நிறுத்துவது அனைவருக்கும் ஆரோக்கியமானதா?

இது தனிப்பட்ட பழக்கவழக்கங்களைப் பொறுத்தது. ஒருவர் மிதமான அளவில் காபி, டீ குடித்து, அது அமிலத்தன்மை, தூக்கமின்மை, அல்லது பதற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால், அதைக் குடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. “ஆனால் காஃபின் அமிலத்தன்மை, படபடப்பு அல்லது செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தினால், அதைக் தவிர்ப்பது நல்லது” என்று ஷேக் கூறினார்.

இறுதி முடிவு:

காஃபின் பானங்களைத் தவிர்ப்பது, அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும். ஆனால், முக்கியமானது நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்ப்பது. “மலைகா செய்தது போல, உங்கள் உடல் கூறுவதை அறிந்து செயல்படுவதுதான் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது” என்று ஷேக் கூறினார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது களத்திலிருந்து மற்றும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களிடமிருந்து வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன்பு எப்போதும் உங்கள் சுகாதாரப் பயிற்சியாளரை அணுகவும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: