பெண் கல்விக்காக பாடுப்பட்ட மலாலா என்ற பாகிஸ்தான் சிறுமி கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுவாத் பள்ளத்தாக்கில் பள்ளி விட்டு வேனில் சென்றுக்கொண்டிருந்த போது, தலிபான் தீவிரவாதிகளால் கண்மூடித்தனமாக சுடப்பட்டார்.
Advertisment
இறந்து விட்டார் என்று நினைத்த போது, அவ்வளவு சீக்கிரமாக இந்த உயிர் போகாது என்று மீண்டு எழுந்தார்.தீவிரவாதிகள் சுட்டதில் அவரின் தலை மற்றும் முகத்தில் குண்டுகள் பாய்ந்தன. பின்பு, அவருக்கு கிரேட் பிரிட்டனில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மனம் தளராக மலாலா ஒரே வாரத்தில் தனது பணியை மீண்டும் துவக்கினார்.
பாகிஸ்தானில் இருக்கும் பெண்கள் பலரும் மலாலாவிற்கு ஆதரவுகள் கரங்களை நீட்டினார். ஆனால் ஆண்களோ பெண் விடுதலைக்கான மேற்கத்திய கலாசாரத்தை மலாலா பரப்புவதாக அவர் மீது தீராத பகையை வளர்த்துக் கொண்டனர்.
பிழைத்து வந்த மலாலா, உலகளவில் குழந்தைகள் கல்வி குறித்தும், கல்வி பெறுவதில் அவர்களுக்கு உள்ள உரிமை குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார்.தனது தந்தை சியாவுதினுடன் சேர்ந்து மலாலா பெண்கள் கல்விக்காக அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கினார். 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவை தேடி வந்தது.
இளம் வயதில் நோபல் பரிசு பெறும் சிறப்பையும், அமைத்திக்கான நோபல் பரிசை பெறும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையையும் மலாலாவையே சேரும். இப்படி மலாலாவின் வாழ்க்கையில் நடந்த பல பக்கங்கள் உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
ஆனால் பெண்கள் பேசுவதை தவறு என நினைத்து அவர்களை ஒடுக்க நினைக்கும் சில மனிதர்கள் மத்தியில் மலாலா போராடி எழுந்து வந்த நிஜங்கள் பலருக்கும் தெரியாது. இதுப் போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக வெளி வருகிறது ’குல் மகாய்' திரைப்படம்.
பாலிவுட் இயக்குனர் அம்ஜத் கான் இயக்கி இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் இன்று வெளியாக ஒரு சிறப்பு காரணமும் உள்ளது. இன்று மலாலாவின் பிறந்த நாள்.