8 வயதில் சந்திப்பு, 15 வயது வித்தியாசம்; ஆனால் காதல் திருமணம் இல்ல: சந்திரமுகி நடிகரின் மனைவி ஓபன் டாக்!

மாளவிகாவைப் பார்த்த கன்னட சினிமாத் துறையை சார்ந்த கணபதி வெங்கட் ரமண ஐயர் தான் இயக்கிய கிருஷ்ண அவதாரம் என்ற படத்தில் மாளவிகாவை கிருஷ்ணராகவே நடிக்க வைத்தார். 

மாளவிகாவைப் பார்த்த கன்னட சினிமாத் துறையை சார்ந்த கணபதி வெங்கட் ரமண ஐயர் தான் இயக்கிய கிருஷ்ண அவதாரம் என்ற படத்தில் மாளவிகாவை கிருஷ்ணராகவே நடிக்க வைத்தார். 

author-image
WebDesk
New Update
istockphoto-866987706-612x612 (1)

உழைப்பை மூலதனமாக கொண்டு சினிமாவில் சாதித்த ஒருவரே நடிகை மாளவிகா அவினாஷ். இவர் கேஜிஎப் 1 இல் கம்பீரமான நடை, ஆளுமையான குரல் கொண்ட ஒரு ஊடகவியலாளராக நடித்திருக்கின்றார். இந்நிலையில் இவர் தொடர்பான பல விடயங்களை தொகுத்து நோக்குவோம். இவர் 1976 இல் ஜனவரி 28 இல் பிறந்தார். இவர் தமிழ் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி ஆவார். அப்பா பெயர் கணேசன். இவர் ஒரு  வங்கி ஊழியராகப் பணிபுரிகின்றார். அதுமட்டுமல்லாது இவர் ஒரு பிரபல எழுத்தாளரும் கூட. அதேபோல்  இவரின் அம்மா பெயர் சாவித்திரி. இவர் ஒரு பிரபல பாடகி. அத்தோடு கிளாசிக்கல் டான்ஸராகவும் இருந்துள்ளார்.

Advertisment

அம்மாவைப் போலவே நடிகை மாளவிகாவிற்கும் டான்ஸ் மேல் அலாதி பிரியம் உண்டு. இந்தப் பரத நாட்டியமே இவருக்கு சினிமாவில் ஒரு அடித்தளத்தையும் இட்டுக் கொடுத்தது. இவர் 5வயசிலிருந்தே கலை மேல் இருக்கின்ற ஆர்வத்தினாலும், ஈடுபாட்டினாலும் முன்னோக்கி அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கினார். அந்தவகையில் எம்ஆர் என்று சொல்லப்படுகின்ற அப்போதைய பரத நாட்டியக் கலைஞரிடம் தன்னுடைய பரத நாட்டியத்தைக் கற்றுக்கொண்ட மாளவிகா, பத்மஸ்ரீ சாம்சனிடம் அடுத்தகட்ட பயிற்சியைக் கற்றுக் கொண்டார். 

இதனைத் தொடர்ந்து இவர் தனது 9 வயதில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். மாளவிகாவைப் பார்த்த கன்னட சினிமாத் துறையை சார்ந்த கணபதி வெங்கட் ரமண ஐயர் தான் இயக்கிய கிருஷ்ண அவதாரம் என்ற படத்தில் மாளவிகாவை கிருஷ்ணராகவே நடிக்க வைத்தார். 

1998 இல் வெளியான 'மாயம் ரூகா' என்ற மலையாள சீரியலில் தன்னுடைய முழு நடிப்பினைக் காண்பித்திருக்கின்றார் மாளவிகா. அதற்கு முன்னாடி மாளவிகா என்று இருந்த இவரின் பெயர் இதற்குப் பின்னர் மாளவிகா அவினாஷ் என மாறத் தொடங்கியது. அதாவது இந்த சீரியலில் தான் இவருக்கு பிரபல வில்லன் நடிகரான அவினாஷுடன் இணைந்து நடிக்கின்ற சான்ஸ் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து 2001 இல் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisment
Advertisements

Screenshot 2025-09-10 175720

சமீபத்திய ஒரு வீடியோவில் தனது திருமண வாழக்கையை பற்றி பேசியிருந்தார். "ந அவரை என்னோட 8 வயதில் முதன் முதலில் பார்த்தேன். நான் ஒரு சைல்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்தேன். அதற்க்கு பிறகு 22  வயதில் நட்பு ஏற்பட்டது. திருமணம் என்பது ஒரு நாள் அல்லது ஒரு மாதம் காரியம் அல்ல. அந்த நினைப்பில் தான் நான் திருமண வாழ்க்கையில் நுழைந்தேன். என்னுடைய ஒரே யோசனை என்னவென்றால், காதல் அழிந்தாலும் இடையில் இருக்கும் நட்பு தான் ரொம்ப முக்கியமானது.

அதனால் அது இருந்தால் மட்டுமே ஒரு ஜோடி இதனை வருடங்கள் நன்றாக வாழ முடியும். அது எங்களுக்கு நன்றாகவே இருந்தது. எனக்கு அந்த வயதில் பெரிதாக பக்குவம் இருந்தது என்று சொல்ல மாட்டேன். அனால் நான் ஒரு கபில் கவுன்செல்லிங் நிகழ்ச்சி செய்தேன், அதனால் எனக்கு அதை பற்றிய ஒரு ஐடியா இருந்தது." என்று பகிர்ந்துகொண்டுள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: