/indian-express-tamil/media/media_files/2025/08/30/actress-bhagyalakshmi-2025-08-30-10-42-43.jpg)
Actress Bhagyalakshmi
அழகான கண்களும், வசீகரமான புன்னகையும் கொண்ட 80-களின் கனவு நாயகி பாக்கியலட்சுமி. மலையாள ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், தமிழ் மற்றும் தெலுங்கில் பாக்யஸ்ரீ என்ற பெயரில் அறியப்பட்டவர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி, குஜராத்தில் தன் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்த இவரின் திரையுலகப் பயணம் பல சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொண்டது.
தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், பாக்கியலட்சுமிக்கு மலையாளமே மறக்க முடியாத கதாபாத்திரங்களை அள்ளித் தந்தது. கதாநாயகி மற்றும் துணை நடிகை என இருவிதமான வேடங்களிலும் சிறந்து விளங்கி, பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். 'அஸ்திரம்', 'இத்திரிப்பூவே சிவன்ன பூவே', 'ஜனகீய கோடதி' மற்றும் 'உயரும் நான் நாடகே' போன்ற 25-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன், தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. அதேபோல, மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி, ரஹ்மான், ரதீஷ் போன்ற முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான கருணாநிதி எழுதிய படத்தில் நடித்ததை அவர் ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறார். அந்தப் படம்தான், இப்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினின் முதல் திரைப்படமும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஐபிசி மங்கை யூடியூப் நேர்காணலில் பேசிய பாக்யஸ்ரீ, ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையில் ஊசிகள் போட்டுக் கொண்டதாக அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார்.
"கொஞ்சம் பூசுன மாதிரி இருந்தாதான் நமக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்கும். அதனால குண்டா ஆகிறதுக்காக 6 ஊசி போட்டுக்கிட்டேன். அப்போ டாக்டர் வந்து இது ரொம்ப கெடுதல் போடக்கூடாதுனு சொன்னாங்க. நான் தான் பிளீஸ் மேடம் எனக்கு ஹீரோயினா நடிக்கணும்னு வற்புறுத்தி போட்டுக்கிட்டேன்.
வாரம் ஒன்னுனு 6 வாரம் 6 ஊசி போட்டுக்கிட்டேன்" என்று அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார் பாக்யஸ்ரீ.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.