Malayalam Translator Muhammed Shafi : எழுத்தாளர் பெருமாள் முருகனை அனைவரும் அறிவோம். தமிழ் இலக்கிய உலகில் மிகவும் முக்கியமாக கருத்தப்படும் அவரின் அர்த்தநாரி என்ற நூலை மலையாளத்தில் மொழி பெயர்த்தவர் ஷஃபி. அவருடைய வாழ்க்கை நடைமுறை கேட்பதற்கு மிகவும் விசித்திரமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது.
கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் முழுப்பிலங்காடு என்ற பகுதியில் வாழ்ந்து வருபவர் முகமது ஷஃபி. செல்லமாக ஷஃபி செருமாவிலயி என்று அழைக்கப்படுபவர். பகலில் கொத்தனாருக்கு உதவியாளராகவும், இரவில் மொழி பெயர்ப்பாளராகவும் தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகின்றார். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர் தற்போது பல்வேறு தமிழ் நூல்களை மலையாளத்தில் மொழி பெயர்த்து வருகிறார்.
Malayalam Translator Muhammed Shafi
சிறுகதை தொகுப்புகள் உட்பட இதுவரை 11 நாவல்களை மொழி பெயர்த்துள்ளார். கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் செருமவிலயி பகுதியில் மீன் விற்பவரான மொய்தீன் குட்டிக்கு மகனாக பிறந்தார் ஷஃபி. சிறு வயதில் இருந்தே கதைகள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்ட ஷஃபி, 10ம் வகுப்புத் தேர்வில் தோல்வியுற்றார். அதன்ன் பின்னர் அவர் பள்ளிக்கு செல்லவில்லை.
”என்னுடைய ஏழை குடும்பத்தில் எனக்கு உறுதுணையாக நின்று என்னை யாரும் உற்சாகப்படுத்தவில்லை. எங்கள் குடும்பத்தில் பிறந்த ஐவரில் இருவர் பள்ளிப்பக்கம் கூட சென்றதில்லை. மற்ற இருவர் நான்காம் வகுப்பு வரை படித்தனர். என் குடும்பத்தில் 10வதை தொட்டவர் நான் மட்டுமே” என்று கூறும் ஷஃபி, மலையாள பத்திரிக்கையில் குழந்தைகளுக்காக எழுதி வருகிறார்.
16 வயதில் கேரளாவில் இருந்து புனேவிற்கு சென்றார். இரண்டு வருடங்கள் கழித்து, பெங்களூரில் இருக்கும் தேநீர் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
பெங்களூரில் வேலை பார்க்கும் தமிழர்கள் அடிக்கடி அங்கு தேநீர் குடிப்பதற்கு வருவதுண்டு. அவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேச கற்றுக் கொண்டேன். பின்பு அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கும் பத்திரிக்கைகள் மூலமாகவும் தமிழ் எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டேன். 10 வருடங்கள் பெங்களூருவில் இருந்ததால் தமிழ் எனக்கு சரளமாக வரத் தொடங்கியது.
பின்பு ரஷ்ய மொழியில் இருந்து தமிழிற்கு மொழி பெயர்க்கப்பட்ட நூலை மலையாளத்தில் மொழி பெயர்க்க நம்பிக்கை பிறந்தது. பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி பத்திரிக்கையான ஜனயுகம் பத்திரிக்கையில் அந்த கதை பிரசுரமானது. கல்ஃப் நாடுகளில் ஒன்றிற்கு மூன்று ஆண்டுகள் கட்ட வேலைக்காக சென்று திரும்பிய ஷஃபி மீண்டும் பெங்களூருவில் துணிக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
பிரபல எழுத்தாளர்களின் தமிழ் நூலை மொழி பெயர்க்கும் ஷஃபி
“அப்போது பிரபல தமிழக எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் பற்றி படித்தேன். அவருடைய எழுத்தில் மீது ஆர்வம் கொண்ட நான், அவரிடம் சென்று, அவருடைய புத்தகங்களை மலையாளத்தில் மொழி பெயர்க்க விரும்புவதாக கூறினேன். அவர் சரி என்று சொன்னவுடன் அனந்த சயனம் காலனி என்ற நூலை மலையாளத்தில் மொழி பெயர்த்தேன். அந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன், பல்வேறு பிரசுரங்கள், மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் மலையாள மொழி பெயர்ப்பிற்காக என்னை அணுகுகிறார்கள்”
2011ம் ஆண்டில் நான் சாகித்ய அகாதெமி நடத்திய மொழிப்பெயர்ப்பு கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கே ஒரு சில நாவல்களை மொழிபெயர்க்க முடியுமா என்று கேட்டுக் கொண்டனர். அதன் பின்னர் சா.கந்தசாமியின் விசாரணை கமிசன் என்ற நூலை மொழி பெயர்த்திருக்கிறார் ஷஃபி.
பெருமாள் முருகனின் அர்த்தநாரி நூலையும் இவர் தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தற்போது, எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் நாவலை மலையாளத்தில் மொழி பெயர்த்து வருகிறார் ஷஃபி.
காலையில் கட்டுமான தொழிலுக்குச் செல்லும் ஷஃபி, 3 மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன், வீட்டில் இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு 7 மணியில் இருந்து 9 மணி வரை நூல்களை மொழி பெயர்ப்பேன். பின்பு மீண்டும் அடுத்த நாள் வேலைக்கு சென்றுவிடுவேன்.
வருமானத்திற்காக நான் மொழிபெயர்க்கவில்லை. சில பிரசுரங்கள் ஒரு பக்கத்திற்கு 10 ரூபாய் கூட தருவது வழக்கம். என் குடும்பத்தை வழி நடத்த அது போதாது. எனக்கு பிடித்திருப்பதால் நான் இந்த இலக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என்று ஷஃபி கூறியுள்ளார்.
மேலும் படிக்க : எனக்கு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும்... தமிழில் வரவேற்று பேசிய நாசா விஞ்ஞானி