/indian-express-tamil/media/media_files/zgVbVntwpCLKsDWum3tg.jpg)
Shabana Aryan
சீரியல் பிரபலம் ஷபானா தன் தோழிகள் விஜே தியா, தீப்தி ஆகியோருடன் சமீபத்தில் மலேசியா, இந்தோனேஷியாவின் பாலித்தீவுக்கு சுற்றுலா சென்றார். மலேசியாவில் பத்துமலை முருகன் கோயில், பெட்ரோனாஸ் ட்வீன் டவர், பாலித்தீவு ஆகிய இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை ஷபானா தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
பாலி
இந்தோனேசியாவின் பாரம்பரிம் நிறைந்த சிறு தீவுப் பகுதி பாலி.இது ஒரு சிறிய, பண்பாடுகள் நிறைந்த, மக்கள் வாழும் தீவு.பாலித்தீவு மக்கள் கலையம்சம் நிரம்பிய வாழ்க்கை உடையவர்களாகக் காணப்படுகின்றனர்.
ஜாகர்த்தா தீவுக்கு அருகில் இருப்பதால் அங்கு செல்பவர்கள் பாலித்தீவுக்கும் செல்கின்றனர். பாலி இன்றும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்ப்பதற்கு காரணம் அதன் இயற்கை வனப்பும் கடற்கரைகளும்தாம். இங்கு உள்ளூர் பயணத்துக்குச் சாலை வழிகள் மட்டுமே உண்டு.
பாலி முழுவதுமே சுற்றுலா பயணிகளுக்கானது. சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.
ஏரிகள், புத்த கோயில்கள், மாலையில் சூரியன் அந்தி சாயும் அழகு, பாரம்பரிய பாலி நடனங்கள், வண்ணத்துப்பூச்சி பூங்கா இப்படி பல அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன.
தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமன்றி எல்லோருமே வாழ்நாளில் ஒருமுறையாவது பாலித் தீவைப் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.