Advertisment

இனி விசா வேண்டாம்- மலேசியாவுல நீங்க அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் இங்கே

மலேசியாவில் பார்க்க வேண்டிய சில சிறந்த இடங்களுக்கான வழிகாட்டி இங்கே.

author-image
WebDesk
New Update
Malaysia

Malaysian travel guide for Indian tourists

இந்திய குடிமக்களுக்கு visa-free entry வழங்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவும் சேர்ந்துள்ளது. மலேசியாவிற்குச் செல்ல விரும்பும் இந்தியப் பயணிகள் இப்போது விசா சம்பிரதாயங்களின் தொந்தரவு இல்லாமல் தேசத்தை சுற்றிப் பார்க்கலாம்.

Advertisment

கோலாலம்பூரின் நவீன அதிசயங்கள், பினாங்கின் சமையல் புகலிடம் அல்லது லங்காவியின் வெப்பமண்டல சொர்க்கம் எதுவாக இருந்தாலும் சரி, விசா இல்லாத நுழைவு, நாட்டின் எண்ணற்ற இடங்களைத் தடையின்றி ரசிப்பதற்கு வழி வகுக்கிறது.

மலேசியாவில் பார்க்க வேண்டிய சில சிறந்த இடங்களுக்கான வழிகாட்டி இங்கே.

கோலா லம்பூர்

தலைநகரான கோலாலம்பூர் ஒரு துடிப்பான மெட்ரோபாலிஸ் நகரமாகும், அங்கு உயரமான வானளாவிய கட்டிடங்கள் வரலாற்று அடையாளங்களை சந்திக்கின்றன. ஐகானிக் பெட்ரோனாஸ் டவர்ஸ், நகரத்தின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை வழங்குகிறது.

மெர்டேக்கா சதுக்கத்தில் உள்ள கல்ட்சுரல் மொசைக், தேசிய மசூதி, சைனா டவுன் மற்றும் லிட்டில் இந்தியாவின் பரபரப்பான தெருக்களில் உலாவலாம். மேலும் நகரின் ஹாக்கர் ஸ்டால் மற்றும் உயர்தர உணவகங்களில் பலவிதமான ரெசிபிகளை தவறவிடாதீர்கள்.

பினாங்

Penang

'கிழக்கின் முத்து' என்று அறியப்படும் பினாங், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும், இது நன்கு பாதுகாக்கப்பட்ட காலனித்துவ கட்டிடக்கலை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தெருக் கலைக்காக கொண்டாடப்படுகிறது. தலைநகர் ஜார்ஜ் டவுன், உணவுப் பிரியர்களின் சொர்க்கமாகும், அதன் ஹாக்கர் சென்டர்ஸ் நாவில் எச்சில் ஊறும் சுவைகளை வழங்குகின்றன.

இங்கு துடிப்பான கிளான் ஜெட்டிஸ்-ஐ (மிதக்கும் சீன கிராமங்கள்) ரசிக்கலாம், அலங்கரிக்கப்பட்ட கெக் லோக் சி கோயிலைப் பார்வையிடலாம். பினாங்கு ஹில் ஃபுனிகுலர் ரயில்வேயில் சவாரி செய்து, தீவின் பரந்த காட்சிகளை கண்டு மகிழலாம்.

லங்காவி

99 தீவுகளின் தீவுக்கூட்டமான லங்காவி, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கடற்கரை ஆர்வலர்களுக்கு புகலிடமாக உள்ளது.

அழகிய கடற்கரைகள், பசுமையான காடுகள் மற்றும் நீல நீர் ஆகியவை ஓய்வெடுப்பதற்கான சரியான இடமாக அமைகிறது.

இங்கு குனுங் மாட் சின்காங்கின் உச்சிக்கு கேபிள் காரில் பயணம் செய்து, மூச்சடைக்கக் கூடிய காட்சிகளைக் காணலாம், கிளிம் கார்ஸ்ட் ஜியோஃபாரஸ்ட் பூங்காவின் சதுப்புநிலக் காடுகளை ஆராயலாம், செனாங் கடற்கரை மணலில் ஓய்வெடுத்து மகிழலாம்

போர்னியோ

Borneo

இணையற்ற வனவிலங்கு அனுபவத்தைப் பெற, மலேசியன் போர்னியோவுக்குச் செல்லவும். சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் செழிப்பான மழைக்காடுகள், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஒராங்குட்டான்கள் மற்றும் பிக்மி யானைகள் போன்ற அரிய உயிரினங்களை காண சிறந்த இடம்.

யுனெஸ்கோவின் பட்டியலிடப்பட்ட கினாபாலு பூங்காவை ஆராயுங்கள், உலகப் புகழ்பெற்ற சிபாடான் நீரில் மூழ்குங்கள். லாங்ஹவுஸ்-இல் துடிப்பான உள்நாட்டு கலாச்சாரங்களை அனுபவிக்கவும்.

மலாக்கா

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மலாக்கா பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமத்தை வெளிப்படுத்தும் ஒரு வரலாற்று நகரமாகும். ஜோங்கர் வாக்கின் குறுகிய தெருக்களில் அலைந்து திரிந்து, டச்சு சதுக்கத்திற்குச் சென்று, எ ஃபமோசா கோட்டையை ஆராயுங்கள்.

அதன் அருங்காட்சியகங்கள், கோவில்கள் மற்றும் தனித்துவமான கட்டிடக்கலை ஆகியவற்றில் நகரத்தின் வளமான வரலாறு பிரதிபலிக்கிறது.

கேமரன் ஹைலேண்ட்ஸ்

Highlands

குளிர்ச்சியான மற்றும் அழகிய மலைவாசஸ்தலமான கேமரன் ஹைலேண்ட்ஸுக்குச் செல்வதன் மூலம் நாட்டின் வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம். தேயிலை தோட்டங்கள், ஸ்ட்ராபெரி பண்ணைகள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற இந்த பகுதி அமைதியான சூழலை வழங்குகிறது.

போஹ் தேயிலைத் தோட்டத்தைப் பார்வையிடலாம், மோசி காடு வழியாக மலையேறவும், புதிதாக காய்ச்சப்பட்ட தேயிலையைப் பருகிக் கொண்டே குளிர்ந்த காலநிலையை அனுபவிக்கலாம்.

ஒருவேளை நீங்க மலேசியா போனா இந்த இடங்களை மிஸ் பண்ணிறாதீங்க…

Read in English: As Malaysia becomes visa-free for Indian travellers, here are the best places to visit in the country

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment