ஒரு முறை இப்படி மல்லித்துவயல் செய்துபாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் துவரம் பருப்பு
கால் கப் கொத்தமல்லி விதைகள்
4 வத்தல்
4 பூண்டு
சின்ன நெல்லிக்காய் அளவு புளி
கால் கப் தேங்காய்
ஒரு கொத்து கருவேப்பிலை
உப்பு
தண்ணீர்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, கொத்தமல்லி, வத்தல், பூண்டு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். நன்றாக வறுபட்டதும், இதை நாம் மிக்ஸியில் சேர்த்து புளி, தேங்காய் துருவல் சேர்த்து முதலில் அரைக்க வேண்டும். தொடர்ந்து அதில் உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.