ஒரு முறை இந்த மால்புவாவை செய்து பாருங்க. செம்ம ருசியான ஸ்வீட் ரெசிபி.
தேவையான பொருட்கள்
அரை கப் மைதா
கால் கப் பால் பவுடர்
கால் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
சிறிய அளவு தண்ணீர்
½ கப் சுகர்
1 கப் தண்ணீர்
கால் ஸ்பூன் குங்குமப் பூ
கால் ஸ்பூன் ஏலக்காய் பவுடர்
பொறிக்கும் அளவு எண்ணெய்
பிஸ்தா 2 ஸ்பூன் நறுக்கியது
செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா, பால் பவுடர், பேக்கிங் பவுடர், தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, குழித் தவியில் மாவு எடுத்து சிறிய வட்டமாக ஊற்றி இரு பக்கமும் பொறித்து எடுக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், குங்குமப் பூ சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து ஏலக்காய் பவுடர் சேர்க்கவும். பாகு ரெடி ஆனதும், இதில் பொறித்த மால்புவாவை சேர்க்கவும். தொடர்ந்து மால்புவா மீது நறுக்கிய பிஸ்தாவை சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“