நடிகை மம்தா மோகன்தாஸ், விட்டிலிகோ என்ற ஆட்டோ இம்யூனே நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். இதற்கு முன், மம்தா புற்றுநோயையும் ஹாட்ஜ்கின் லிம்போமாவையும் (Hodgkin’s Lymphoma) வெற்றிகரமாக எதிர்த்துப் போராடினார்.
விட்டிலிகோ என்றால் என்ன?
ஹைதராபாத், யசோதா மருத்துவமனையின் டாக்டர் திலீப் குடே கருத்துப்படி, விட்டிலிகோ என்பது ஒரு நாள்பட்ட ஆட்டோ இம்யூனே கோளாறு ஆகும், இது தோலின் பிக்மென்ட் அல்லது நிறத்தை இழக்கச் செய்கிறது.
மெலனோசைட் - நிறமிகளை உருவாக்கும் தோல் செல்கள் - தாக்கப்பட்டு அழிக்கப்படும் போது இது நிகழ்கிறது, இதனால் தோல் பால்-வெள்ளை நிறமாக மாறும்," என்று அவர் கூறினார்.
அறிகுறிகள்
இரு கைகளிலும் அல்லது இரு முழங்கால்களிலும், உடலின் இருபுறமும் தோன்றும் வெள்ளைத் திட்டுகள் இந்த கோளாறின் பொதுவான அறிகுறி. அரிதாக, நிறம் அல்லது பிக்மென்டில் விரைவான இழப்பு ஏற்படலாம், மேலும் திட்டுகள் ஒரு பரவலாகிக் கொண்டே போகும், என்று அவர் கூறினார்.
இந்த கோளாறில், தோல் நிறமியை இழக்கும் பகுதிகளில் முடி வெண்மையாக மாறும், இது உச்சந்தலையில், புருவங்கள், கண் இமைகள், தாடி மற்றும் உடல் முடி போன்ற எந்தப் பகுதியிலும் நிகழலாம் என்று டாக்டர் குடே எடுத்துரைத்தார். வாய் அல்லது மூக்கின் உட்புறம் போன்ற சளி சவ்வுகளும் கூட விட்டிலிகோவால் பாதிக்கப்படலாம்.
எதனால் ஏற்படுகிறது?
விட்டிலிகோ என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும், இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மெலனோசைட்டுகளைத் தாக்கி அழிக்கிறது. விட்டிலிகோவை ஏற்படுத்துவதில் மரபணு மற்றும் குடும்ப வரலாற்றின் வலுவான பங்கு உள்ளது. வெயில், மன உளைச்சல் அல்லது சில ரசாயனங்களின் வெளிப்பாடு போன்ற வெளிப்புற காரணிகள் விட்டிலிகோவைத் தூண்டலாம் அல்லது அதை மோசமாக்கலாம், என்று நிபுணர் மேலும் கூறினார்.
தடுப்பு மற்றும் சிகிச்சை
விட்டிலிகோவைத் தடுப்பதற்கான முழுமையான சிகிச்சை தற்போது இல்லை. ஆனால் சிகிச்சையின் மூலம், நிறமியை மீட்டெடுப்பது மற்றும் அதிக சருமத்தை பாதிக்காமல் நிறமியை தடுக்கலாம். சூரிய ஒளிக்கு வெளிபடாமல் இருப்பது, நிறமாற்றம் மற்றும் சேதத்தைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும் என்ற டாக்டர் குடே சில சிகிச்சை விருப்பங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சிகிச்சை
UVB உடன் போட்டோதெரபி, செயலில் உள்ள விட்டிலிகோவின் வளர்ச்சியை நிறுத்த அல்லது மெதுவாக்குவதாகக் காட்டப்பட்டுள்ளது. கார்டிகோஸ்டீராய்டு அல்லது கால்சினியூரின் தடுப்பான்களுடன் பயன்படுத்தும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சோராலென் மற்றும் லைட் தெரபி
இந்தச் சிகிச்சையானது சோராலன் (psoralen) எனப்படும் தாவரத்திலிருந்து பெறப்பட்ட பொருளை, ஃபோட்டோகீமோதெரபி உடன் இணைத்து செய்யப்படுகிறது.
மீதமுள்ள நிறத்தை நீக்குதல்
உங்கள் விட்டிலிகோ பரவலாக இருந்தால் மற்றும் பிற சிகிச்சைகள் வேலை செய்யவில்லை என்றால் இந்த சிகிச்சை ஒரு விருப்பமாக இருக்கலாம். இதில் சருமத்தின் பாதிக்கப்படாத பகுதிகளுக்கு ஒரு டிபிக்மென்டிங் ஏஜென்ட் பயன்படுத்தப்படுகிறது. இது படிப்படியாக சருமத்தை ஒளிரச் செய்கிறது, இதனால் அது நிறமாற்றமான பகுதிகளுடன் கலக்கிறது.
இந்த சிகிச்சையானது ஒன்பது மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யப்படுகிறது.
அறுவை சிகிச்சை
ஒளி சிகிச்சை மற்றும் மருந்துகள் வேலை செய்யவில்லை என்றால், நிலையான விட்டிலிகோ கொண்ட சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
இதுத்தவிர ஸ்கின் கிராஃப்டிங் (Skin grafting), பிளிஸ்டர் கிராஃப்டிங் (Blister grafting), செல்லுலார் சஸ்பென்ஷன் டிரான்ஸ்பிளாண்ட், அஃபாமெலனோடைடு எனப்படும் நிறத்தை உருவாக்கும் செல்களை (melanocytes) தூண்டும் மருந்து போன்ற நுட்பங்கள் நிறத்தை மீட்டெடுப்பதன் மூலம் தோலின் நிறத்தை சமன் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“