ஒரு அரிதான சம்பவத்தில், 41 வயது நபர் மது அருந்தியபோது இரண்டு வயாக்ரா மாத்திரைகளை உட்கொண்டதால் இறந்தார் என்று தடயவியல் மற்றும் சட்ட மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலில் பெண் தோழியை சந்தித்த ஆண், வயாகரா என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் Sildenafil இரண்டு 50mg மாத்திரைகளை எடுத்துக் கொண்ட வழக்கை ஆய்வு பகுப்பாய்வு செய்தது. குறிப்பிடத்தக்க மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வரலாறு இல்லாத அடையாளம் தெரியாத நபர், அந்த நேரத்தில் மது அருந்தியிருந்தார்.
மறுநாள் காலையில், அந்த நபருக்கு சோர்வு ஏற்பட்டது, மேலும் வாந்தி எடுத்தார், அதன் பிறகு அவரது பெண் தோழி அவரை மருத்துவ உதவியை நாடுமாறு வலியுறுத்தினார். இருப்பினும், அவர் அதை நிராகரித்தார், அவர் இதற்கு முன்பும் இதை அறிகுறிகளை அனுபவித்ததாக அவளிடம் கூறினார்.
அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆய்வின்படி, மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் குறைந்து, மூளைக்குழாய் ரத்தப்போக்கு காரணமாக (cerebrovascular haemorrhage) அவர் இறந்தார்.
பிரேத பரிசோதனையில், 300 கிராம் எடையுள்ள ரத்தம் உறைந்திருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். ஆல்கஹால், மருந்துகள் மற்றும் ஏற்கனவே இருந்த உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றின் கலவையானது அவரது மரணத்திற்கு வழிவகுத்தது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
சில்டெனாபில் என்பது விறைப்புச் செயலிழப்புக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து. கடந்த சில ஆண்டுகளில் இளம் இந்திய மக்களிடையே சில்டெனாஃபிலின் பரிந்துரைக்கப்படாத பயன்பாடு அதிகரித்துள்ளதாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

செரிப்ரோவாஸ்குலர் விபத்துக்கள் உட்பட சில்டெனாபில் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பயன்பாட்டின் ஆபத்தான சிக்கல்கள் பற்றி பேசும் ஆய்வு ஆசிரியர்கள் மேலும் பொது விழிப்புணர்வை வலியுறுத்துகின்றனர்.
சில்டெனாபிலின் ஆவணப்படுத்தப்பட்ட பாதகமான விளைவுகள் தலைவலி, சிவந்துபோதல், மூக்கடைப்பு, டிஸ்ஸ்பெசியா மற்றும் ரத்த அழுத்த குறைவு ஆகியவையாகும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
sildenafil ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், அதை எத்தனாலுடன் இணைப்பது இந்த விளைவை மேலும் அதிகரிக்கக்கூடும். தலைச்சுற்றல், மயக்கம், சிவத்தல், தலைவலி மற்றும் படபடப்பு போன்ற அறிகுறிகளை ஒருவர் அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம் என்று டாக்டர் ஷ்ரே ஸ்ரீவஸ்தவ் கூறினார்.
ஆனால் அரிதாக இது இதயத் துடிப்பு (cardiac arrhythmia) மற்றும் மூளை ரத்தக்கசிவு போன்ற அபாயகரமான சிக்கல்களை ஏற்படுத்தலாம். சில்டெனாபில் மூளையின் இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது, இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் ரத்தப்போக்குக்கு வழிவகுக்கும், இது கண்களில் ரத்தக்கசிவை ஏற்படுத்தக்கூடும், என்று டாக்டர் ஸ்ரீவஸ்தவ் கூறினார்.
கருவுறுதல் ஆலோசகர் டாக்டர் தேஜாஸ் குண்டேவார் கூறுகையில், திடீரென ரத்த அழுத்தம் குறைவதால் இதயத்திற்கு ரத்த ஓட்டம் குறையும், இதன் விளைவாக மினி மாரடைப்பு (myocardial ischemia) ஏற்படுத்துகிறது, இது மரணத்திற்கு வழிவகுக்கும்.
இந்த அரிதான சந்தர்ப்பத்தில், அந்த மனிதனுக்கு கண்டறியப்படாத சில இதய நோய் இருந்திருக்கலாம், இது இந்த சிக்கலை ஏற்படுத்தியிருக்கலாம். வயக்ரா மாத்திரையானது விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் அனைத்து வகையான நோயாளிகளிலும் அதன் பாதுகாப்புக்கு பல சான்றுகள் நிரூபித்துள்ளன, என்று டாக்டர் குண்டேவர் கூறினார்.
எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் என்ன?
– சில்டெனாபிலுடன் மது அருந்துவதைத் தவிர்க்கவும்
– அதிகப்படியான மருந்துகளை உட்கொள்வதையும் ஒருவர் தவிர்க்க வேண்டும்
வயாக்ரா பாதுகாப்பாக இருந்தபோதிலும், அது ஒரு தகுதிவாய்ந்த ஆண்ட்ரோலஜிஸ்ட்டின் வழிகாட்டுதலின் கீழ் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் அதிகப்படியான பயன்பாடு தவிக்கப்பட வேண்டும், என்று டாக்டர் குண்டேவர் குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“