Advertisment

உங்க நுரையீரலை பாதுகாக்க இந்த உணவுகள்: இனி இதை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க

நமது நுரையீரலை நாம் சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும். வானிலை மாற்றம் ஏற்படும்போது நமது நுரையீரல் தொற்றுகளால் பாதிக்கப்படும்.

author-image
WebDesk
New Update
உணவுகள்

நமது நுரையீரலை நாம் சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும். வானிலை மாற்றம் ஏற்படும்போது நமது நுரையீரல் தொற்றுகளால் பாதிக்கப்படும். சீன மருத்துவத்தை பொருத்தவரை நமது நுரையீரலுக்கு எது நன்மை தரும் என்பதை  நாம் தெரிந்துகொண்டால், அது சருமத்திற்கு நன்மை தரும்.

Advertisment

தேன்

சுத்தமான தேன் இருமலை தடுத்து நிறுத்தும், குட்டலை மிரதுவாக்கும். மலச்சிக்கல் குணப்படுத்தும். வலியை குணமாக்கும். நாட்டுத் தேனை நாம் தேர்வு செய்வது முக்கியமானது. சுவாசப் பாதையை  அடைத்துக்கொண்டு இருக்கும் மூக்கஸை தேன் உடைக்கும்.  காற்று செல்லும் குழாய்களில் உள்ள வீக்கத்தை குறைக்கும்.

பேரிக்காய்

உடலில் உள்ள திரவங்களை புதுமையாக உருவாக்கும், தாகத்தை தீர்க்கும், இதயத்தை சாந்தப்படுத்தும். நுரையீரலை தடையின்று செயல்பட உதவும். சிறுநீர் சரியாக வெளியேற்ற உதவும், தொண்டை வரட்சியை குணப்படுத்தும். தொல்லை தரும் மூக்கஸை கரைக்க உதவும். இருமலை தடுக்கும். பேரிக்காயில் காட்டிசின்ஸ் இருப்பதால் இது நுரையீரலை  காப்பாற்றும்.

இஞ்சி

இது மண்ணிரலுக்கு சிறந்த உணவு. அதேநேரத்தில் நுரையீரலையும் காப்பாற்றும். இது இருமல், சளி, குமட்டல், அஜீரணத்தை குணமாக்கும். இஞ்சி- தேனின் காம்பினேஷன் நுரையிரலில் உள்ள மூக்கஸை நீக்கும். இதில் தர்மிக் விளைவு இருப்பதால், உடலுக்கு வெப்பத்தை கொடுக்கும்.

இதுபோல பூண்டு, பச்சை மிளகாய், முள்ளங்கி இவை ஜீரண ஆரோக்கியத்திற்கு நல்லது அதே நேரத்தில் நுரையீரலுக்கும் நல்லது.

நெல்லிக்காய்

இதில் வைட்டமின் சி உள்ளது. நுரையீரலை பாதிக்கும் தொற்று நோய்களை தடுக்கும்.

அண்ணாச்சி பழ சாறு

இதில் புரொமிலயின் உள்ளதால், இது நுரையீரலை அடைத்துகொள்ளாமல் பார்த்துகொள்ளும்.

பார்லி

இதில் உள்ள அதிக நார்சத்து நுரையீரல்  செயல்பாடுகளை பாதுகாக்கிறது. நுரையீரல் நோயால் மரணம் ஏற்படுவதை குறைக்க உதவலாம் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட், பிளபாய்ட்ஸ், வைட்டமின் இ நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment