ஒருவருக்கு டைப்-2 நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவற்றில் ஒன்று இன்சுலின் எதிர்ப்பு குறைவு.
ஆரம்பகால நோயறிதலின் போது அபாயத்தைக் குறைப்பது மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியம். பொதுவாக, நீரிழிவு நோய் என்பது அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டை பாதிக்கும் மிக மோசமான நோய்களில் ஒன்றாகும்.
இந்த நிலைக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்பதால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரே வழி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் இன்சுலின் பராமரிப்பது மட்டுமே.
எனினும், இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த பலர் இன்சுலின் ஊசிகளை எடுக்க வேண்டியிருக்கும். அப்போது, அது சிக்கலானதாக மாறும், எனவே, டைப்-2 நீரிழிவு நோயைக் கண்டறியும் போது ஆரம்பத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இதனால் நீங்கள் கூடுதல் இன்சுலின் இல்லாமல் சமாளிக்க முடியும். இந்த நிலையில், பென் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் கூற்றுப்படி, இன்சுலின் இரத்த சர்க்கரையை உடலின் செல்களுக்குள் நுழைய உதவுகிறது, எனவே அதை ஆற்றலுக்குப் பயன்படுத்தலாம். இன்சுலின் கல்லீரலுக்கு இரத்த சர்க்கரையை பிற்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கிறது.
நீரிழிவை கட்டுக்குள் வைப்பது எப்படி?
இன்சுலின் இல்லாமல் டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.
உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்:
டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், நன்கு சமநிலையான உணவை உண்ணவும்.
நீரிழிவு நோய் கண்டறியப்பட்டவுடன் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவது அவசியம்.
உங்கள் தற்போதைய எடை மற்றும் உயரத்தைப் பொறுத்து, அதிகமாக காணப்பட்டால் மருத்துவர் உடல் எடையை குறைக்க ஊக்குவிக்கலாம். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள எடை இழப்புத் திட்டத்தை உருவாக்க உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணர் உங்களுக்கு உதவலாம்.
சரிவிகித உணவை உண்ணுங்கள்:
ரத்தத்தில் சர்க்கரை அளவு மாறாத உணவு வகைகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உடற்பயிற்சி:
தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி இல்லையென்றால், நடைபயிற்சி, ஜாகிங், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுங்கள். இது விரைவான செரிமானத்திற்கும் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
புகையிலையை நிறுத்துங்கள்:
நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, புகைபிடித்தல் மற்றும் புகையிலை நுகர்வு ஆகியவை உடலின் மிக மோசமான எதிரிகள். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை நீங்கள் அறிந்தவுடன் புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.
சரியான தூக்கம்:
போதுமான மற்றும் தடையற்ற தூக்கம் பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. பல்வேறு உறுப்புகள் சரியாகச் செயல்பட ஒவ்வொரு நாளும் குறைந்தது 8-9 மணிநேரம் தூங்குவது மிகவும் முக்கியம்.
வாய்வழி மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்:
டைப் 2 நீரிழிவு நோய்க்கு பரிந்துரைக்கப்படும் வாய்வழி மருந்துகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil