சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் ஆலயத்தில், 200 ஆண்டுகளுக்கு பழமையான ஆலமரம் திடீரென சாய்ந்து விழுந்தது.
இதனை அறிந்த பக்தர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். பெரும்பாலானோர், இந்த ஆலமரம் கோயிலின் புனித மரமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் போது, இந்த ஆலமரத்தை அகற்றாமல் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.