மானாமதுரை என்றால் மண்பாண்டம் என்று நினைவுக்கு வருவது வழக்கம். அப்படிப்பட்ட மண்பாண்ட தொழிலுக்கு ஏற்ற ஊரான மானாமதுரையில் மண்பாண்டத்தில் சீசனுக்கு ஏற்றவாறு மண்ணால் ஆன பொருட்கள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது கார்த்திகை தீபத்திருநாள் வரும் வேளையில் தொழிலாளர்கள் பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.
கார்த்திகை தீப திருநாள் நெருங்கி வரும் வேளையில் மண்பாண்டத்திற்கு பெயர் பெற்ற மானாமதுரையில் அகல் விளக்கு தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. இங்கிருந்து கலைநயம் மிக்க மண்பாண்ட பொருட்களை தயாரித்து வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
மானாமதுரையில் 300-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. திருக்கார்த்திகை அன்று வீடுகள் தோறும் அகல் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இதற்காக மானாமதுரையில் மண்பாண்டதொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக விளக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
15 முதல் 1000 ரூபாய் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. ஐந்து முகம், 21 முகம் வரை கார்த்திகை தீப விளக்குகளும் சிறிய அகல் விளக்கு, சர விளக்கு, சங்கு விளக்கு, தேங்காய் விளக்கு உள்ளிட்ட பல்வேறு டிசைன்களில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
மண்ணால் தயாரிக்கப்படும் இந்த விளக்குகளை வெயிலில் காயவைத்து அதன்பின் சூளையில் வைத்து சுடப்பட்டு பின்னர் விற்பனைக்கு அனுப்படுவது வழக்கம். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் மழையினாலும் பணிகள் பதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் குறிப்பாக இந்த மழையினால் செய்கின்ற மண்பாண்ட பொருட்களை வெயிலில் காய வைப்பது சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அவ்வப்போது வெயில் அடித்தால் பணிகளை துரிதப்படுத்தி செய்து வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“