மணத் தக்காளி கீரை குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம். மணத் தக்காளி வயிறு, வாய் புண் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக இருக்கும். அல்சர், கர்பப்பை பிரச்சினைகளுக்கும் சிறந்ததாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மணத் தக்காளி கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 15
வரமிளகாய் - 3
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 கப்
மஞ்சள்தூள், எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் மணித்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து நீரில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அரை மூடிதேங்காயை சிறிது நீர் விட்டு அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய், சீரகம், வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கீரையும் சேர்க்கவும். கீரை வதங்கிய பின் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும். அவ்வளவு தான் சுவை, மருத்துவ குணம் நிறைந்த மணத் தக்காளி கீரை குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“