mandira bedi age : பாலிவுட் நட்சத்திரங்களில் மந்த்ரா பேடி என்றால் வாயை பிளக்காத ரசிகர்களே இல்லை எனலாம். 47 வயதில் படு ஃபிட்டான உடல் அமைப்புடன் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கிறார் மந்த்ரா. 90 கிட்ஸ் தமிழில் வெளியான மன்மதன் படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடவில்லை. இதில் ஒரே ஒரு பாடலுக்கு மந்த்ரா ஆடி டான்ஸ் அப்போதைய இளசுகளின் ஃபேவரெட்.
இப்போது படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட மந்த்ரா வெப் சீரியஸ்கள், ரியாலிட்டி ஷோக்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லை சமீபத்தில் வெளியான சாகோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மந்த்ரா நடித்திருந்தார்.
இவரின் அழகுக்கு மிக முக்கிய காரணம் அவரின் உடற்பயிற்சி, கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் யோகா தான். திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் மந்த்ரா 47 வயதில் இப்படியொரு இளமையுடன் இருப்பது மற்ற நடிகைகளுக்கு லேசான பொறாமையை கூட ஏற்படுத்தலாம்.
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது மந்த்ரா ஹாட் மற்றும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஹிட் அடிப்பார். அந்த வகையில் சமீபத்தில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சென்றுள்ள அவர், பிகினி உடையில் அசத்தலான புகைப்படங்களை எடுத்து அதை பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோக்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய்யுள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..
சினிமா ரசிகர்கள் மட்டுமில்லை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மந்த்ரா ஃபேவரெட் தான். 2003 கிரிக்கெட் உலகக்கோப்பை, 2004 சாம்பியன்ஸ் கோப்பை, 2009 ஐ.பி.எல் ஆகிய கிரிக்கெட் தொடர்களில் மந்த்ராவின் ஆங்கரிங் ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. தனது குடும்பத்துடன் மாலத்தீவில் மந்த்ரா நேரம் செலவழிக்கும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.