யோகாவில் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நமது மன ஆரோக்கியத்திற்கும் கூட பல நன்மைகள் உள்ளன. எனவே, யோகா போஸின் சில மாறுபாடுகள் கூட சரியான உணவுடன் இணைந்தால் வாழ்க்கை முறை பிரச்சனைகளை கையாள்வதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உண்மையில், யோகா பயிற்சியாளர் ஜூஹி கபூரின் கூற்றுப்படி, தவளை போஸ் அல்லது மண்டுகாசனம் - ஒரு மாதத்திற்கு தினமும் பயிற்சி செய்தால், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மண்டுகாசனம் என்பது சமஸ்கிருத சொல், இதில் 'மண்டுகா' என்பது தவளை. இந்த போஸ் ஒரு தவளையின் அம்சத்தை பிரதிபலிப்பதோடு, இயற்கையைக் கவனிப்பதன் மூலம் உள்ளார்ந்த அமைதி, தியானம் பற்றிய யோசனையையும் குறிக்கிறது.
கெரண்டா சம்ஹிதாவில் (Gheranda Samhita) குறிப்பிடப்பட்டுள்ள 32 முக்கிய ஆசனங்களில் இதுவும் ஒன்றாகும். ஹதரத்னாவலியின்படி (Hatharatnavali) சிவபெருமான் போதித்த 84 தோரணங்களில் மண்டூகாசனம் ஒன்றாகும். இது வஜ்ராசனம் ஆசனங்களின் குழுவின் கீழ் வருகிறது, என்று யோகா பயிற்றுவிப்பாளர் ஃபெனில் புரோஹித் விளக்கினார்.
எப்படி செய்வது?
மேலே வீடியோவில் காட்டியபடி, யோகா மேட்டில், தவளைப் போல படுத்துக் கொண்டு இந்த ஆசனத்தை செய்யவும்…
நீங்கள் இப்போது தான் புதிதாக இந்த ஆசனம் செய்ய போகிறீர்கள் என்றால், தலா 3 சுற்றுகள் செய்யவும். ஒவ்வொரு முறையும் 3-5 முறை சுவாசத்தை நன்கு உள்ளிழுத்து வெளியே விடவும்.
போதுமான பயிற்சிக்குப் பிறகு, 10-15 சுவாசங்களுக்கு 1 சுற்று போதுமானது, என்று புரோஹித் கூறினார்.
தவளை தோரணைக்கும் உங்கள் பாலியல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளதா?
ஹைபோதாலமிக்-பிட்யூட்டரி-ஓவேரியன் அக்சஸ் (Hypothalamic-Pituitary-Ovarian) முதன்மையாக பெண் இனப்பெருக்க அமைப்பின் ஒழுங்குமுறையுடன் தொடர்புடையது, அதே சமயம் ஹைபோதாலமிக்-பிட்யூட்டரி-கோனாடல் அக்சஸ் (Hypothalamic-Pituitary-Gonadal) ஆண்களின் இனப்பெருக்க அமைப்பை ஒழுங்குபடுத்துகிறது.
இந்த ஹார்மோன் அக்சஸ் கருவுறுதல் மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மண்டுகாசனம் அல்லது தவளை போஸ், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் சில நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், ஆனால் இந்த விளைவுகள் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை மற்றும் தனிநபர்களிடையே வேறுபடலாம், என்று புரோஹித் விளக்கினார்.
பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கான HPO/HPG அக்சஸ், மண்டுகாசனாவிற்கும் இடையே உள்ள சாத்தியமான தொடர்பு பற்றிய கண்ணோட்டம் இங்கே உள்ளது.
/indian-express-tamil/media/media_files/3QBcy4udajst8nM1PK6Y.jpg)
மன அழுத்தம்
மண்டூகாசனா உள்ளிட்ட யோகாசனங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், ரிலக்சேஷனை மேம்படுத்தவும் உதவும். அதிகமான கவலை HPO/HPG அக்சஸில், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், இது பெண்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளுக்கு வழிவகுக்கும் மற்றும் ஆண்களில் விந்தணு உற்பத்தி குறைகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம், மண்டுகாசனம் மறைமுகமாக ஆரோக்கியமான ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கலாம்.
ரத்த ஓட்டம்
மண்டுகாசனா என்பது இடுப்புப் பகுதியை நீட்டுவதும், சுருக்குவதும் ஆகும், இது இனப்பெருக்க உறுப்புகளுக்கு சிறந்த ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். மேம்பட்ட ரத்த ஓட்டம் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
இடுப்பு பகுதியில் வலிமை
இந்த யோகாசனம் பாலுறவு செயல்பாடு மற்றும் சிறுநீர் கட்டுப்பாட்டிற்கு முக்கியமான இடுப்புத் தசைகளை வலுப்படுத்தும். பெண்களில், வலுவான இடுப்புத் தசைகள் பிரசவம் மற்றும் பாலியல் திருப்திக்கு உதவும். ஆண்களில், இடுப்புத் தளத்தின், ஆரோக்கியம் விறைப்புச் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹார்மோன் சமநிலை
HPO/HPG அக்சஸ் உள்ள ஹார்மோன் சமநிலையுடன் மண்டுகாசனாவை இணைக்கும் நேரடி ஆதாரம் இல்லை என்றாலும், யோகா உட்பட வழக்கமான உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது ஒட்டுமொத்த ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்.
மனம்-உடல் இணைப்பு
மண்டூகாசனம் போன்ற யோகா பயிற்சிகள், மனம்-உடல் தொடர்பை வலியுறுத்துகின்றன. பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய நேர்மறையான கண்ணோட்டம் உளவியல் ரீதியான பலன்களைக் கொண்டிருக்கலாம், இது மறைமுகமாக சிறந்த இனப்பெருக்க செயல்பாட்டை ஆதரிக்கலாம்.
இது அனைவரும் செய்யலாமா?
பொதுவாக யோகா அனைவரும் செய்யலாம், மேலும் அவை தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படலாம். யோகாவை பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயிற்சி செய்வது முக்கியம், மேலும் உங்கள் உடல் மற்றும் விருப்பங்களுக்கு இடமளிக்கும் வகையில் அவற்றை எப்போதும் மாற்றியமைக்கலாம், என்று புரோஹித் கூறினார்.
கணுக்கால், முழங்கால் அல்லது இடுப்பு காயங்கள், நாள்பட்ட இதய நோய்கள், கடுமையான முதுகுவலி மற்றும் கிளௌகோமா மற்றும் கண்புரை போன்ற கடுமையான கண் கோளாறுகள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வயிறு, மார்பு, முழங்கால் அல்லது கால்களில் அறுவை சிகிச்சை செய்தவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
Read in English: Frog pose variation can help with sexual, reproductive health
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“