சுவை அள்ளும் மாம்பழ ஜாம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
துருவிய (அல்லது) பொடியாக நறுக்கிய மாம்பழம் – 1 கப்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
சர்க்கரை – 1 கப்
கசகசா தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய் சேர்க்காமல் வறுத்த சீரகத் தூள்– 2 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் மாம்பழத்தை துருவி அல்லது சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம் தாளித்து பின்னர் துருவிய மாம்பழம் சேர்க்க வேண்டும். மாங்காய் நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்து மிளகாய்த் தூள், வறுத்த சீரகத் தூள் உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கி கிளறவும். இப்போது சர்க்கரையுடன் மாம்பழம் கலந்து ஜாம் பதத்திற்கு வரும். அப்போது அடுப்பை நிறுத்தி இறக்கவும். அவ்வளவு தான் தித்திப்பான மாம்பழ ஜாம் ரெடி. குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். ஒரு முறை செய்து கொடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“