அட்டகாசமான மாம்பழ கேசரி, இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
மாம்பழம் – 1
ரவை- ½ கப்
தண்ணீர்- 1 கப்
சர்க்கரை – ¾ கப்
நெய் – 6 ஸ்பூன்
முந்திரி பருப்பு
திராட்சை
ஏலக்காய் தூள் கால் ஸ்பூன்
குங்குமப் பூ
செய்முறை: மாம்பழத்தை தோல் நீக்கி அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து வறுத்து கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.
தொடர்ந்து நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுத்துகொள்ளவும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, வறுத்த ரவையை சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து மாம்பழம் அரைத்ததை சேர்த்து கிளரவும். சர்க்கரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து நெய்யை சேர்த்து கிளரவும். ஏலக்காய் தூள் சேர்த்து கிளரவும். முந்திரி, திராட்சையை சேர்த்து கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“