இப்படி மாங்காய் ஊறுகாய் செய்தால், ஒரு வருடம் வரை கெட்டுப்போகாது.
தேவையான பொருட்கள்
4 கப் மாங்காய்
கால் கப் உப்பு
கால் கப் வெந்தயம்
கால் கப் கடுகு
2 ஸ்பூன் பெருங்காயம்
நல்லெண்ணய்
1 ஸ்புன் கடுகு
கால் கப் மிளகாய் பொடி
செய்முறை : மாங்காய்யை நாம் நறுக்கி கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, உப்பு சேர்த்து கிளர வேண்டும். இதை ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். ஒரு பாத்திரத்தில் வெந்தயம் சேர்த்து வறுத்துகொள்ளவும். தொடர்ந்து அதில் கடுகு சேர்த்து வறுக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும். இவை இரண்டையும் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து மேலும் மாங்காயில் பெருங்காயத்தை நேரடியாக சேர்க்கவும். தொடர்ந்து நல்லெண்ணையை சூடு செய்யவும். அதில் கடுகு சேர்க்கவும். தொடர்ந்து மிளகாய் பொடி சேர்த்தவுடன் அடுப்பை அணைக்கவும். தொடர்ந்து கிளரவும். இதை மாங்காயில் கொட்டவும், தொடர்ந்து, கிளர வேண்டும். இதை இரண்டு நாட்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். தொடர்ந்து இதை கண்ணாடி ஜாடியில் போட்டு வைக்கவும். ஒரு வருடம் வரை கெட்டுப்போகாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“