ஒரு முறை மாங்காய் ஊறுகாய், இப்படி செய்யுங்க
தேவையான பொருட்கள்
மாங்காய் - 3
நல்லெண்ணெய் - 1 கப்
மிளகாய் தூள் - 1 கப்
உப்பு - 1 கப்
பெருங்காயத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் 1 டீஸ்பூன்
பூண்டு - தேவையான அளவு
செய்முறை
முதலில் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி கொள்ளவும். கடுகையும் அரைத்து எடுக்கவும். பூண்டை தனியாக அரைத்து வைக்கவும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும். அடுத்ததாக உப்பு, அரைத்த பூண்டு பேஸ்ட்டை, மற்ற பொடிகளை கலந்து கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து மசாலாவை கிளறி பிரட்டுங்கள். இறுதியாக நல்லெண்ணெய்யை காய்ச்சி கலவையில் ஊற்றி சூடான பதத்துடன் கிளறுங்கள். அவ்வளவு தான் சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி.