இப்படி ஒரு மாங்காய் ஊறுகாய், செய்து பாருங்க செம்ம சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
1.2 பச்சை மாங்காய்
½ கப் உப்பு
3 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் வெந்தயம்
கட்டி பெருங்காயம்
¾ கப் மிளகாய் பொடி
½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி
1.5 கப் நல்லெண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் கடுகு
½ டேபிள் ஸ்பூன் வெந்தயம்
செய்முறை:
மாங்காய்யை நறுக்க வேண்டும், அதில் உப்பு சேத்து இரவு முழுவதிலும் ஊற வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் கடுகு,வெந்தயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதை பொடித்து கொள்ளவும். கட்டி பெருங்காயத்தை வறுக்க வேண்டும். தொடர்ந்து மாங்காயில் மிளகாய் தூள், மஞ்சள் பொடி, பொடித்த கடுகு வெந்தயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம் சேர்த்து பொறித்து, இந்த மாங்காயில் கொட்டவும். 3 நாட்கள் வெயிலில் வைக்கவும். இந்த மாங்காய் ஊறுகாய் ஒரு வருடம் வரை கெட்டுப்போகாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“