அசத்தும் மாங்காய் ரசம், ஒரு முறை இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
2 மாங்காய்
3 பச்சை மிளகாய்
வெங்காயம் 1 நறுக்கியது
இஞ்சி நறுக்கியது 2 ஸ்பூன்
பூண்டு 2 ஸ்பூன்
1 கைபிடி கொத்தமல்லி நறுக்கியது
உப்பு
வெல்லம் அரை ஸ்பூன்
செய்முறை: மாங்காய் குக்கரில், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு 3 விசில் விடவும். இதை நன்றாக மசிக்கவும், தொடர்ந்து இதில் வெங்காயம் நறுக்கியது, இஞ்சி நறுக்கியது, பூண்டு நறுக்கியதை சேர்த்து கிளரவும், கொத்தமல்லி நறுக்கியதை சேர்த்து கிளரவும், வெல்லம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து கொதிக்க வைக்கவும். சூப்பரான மாங்காய் ரசம் ரெடி.