சுவையான, புதுமையான மாங்காய் வடை ரெசிபி செய்வது குறித்துப் பார்ப்போம்.
மாங்காய் – 1
பச்சை மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
2 பருப்பையும் நீரில் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை பாத்திரத்தில் மாற்றி இதனுடன் துருவிய மாங்காய், மிளகாய் சோம்பு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்த மாவை வடையாக தட்டிப் போட்டு எப்போதும் போல் பொன்னிறமாக பொறித்து எடுத்தால் புதுவிதமான, சுவையான டேஸ்டி வடை ரெடி.