மாங்காயின் மாம்பருப்பு ஏராளமான சத்துகளை கொண்டுள்ளது. மாம்பருப்பு புரதம், நார்ச்சத்து, கால்சியம் என பலவிதமான சத்துகளை உள்ளடக்கியிருக்கிறது. மாங்கொட்டையில் வத்தக் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மாங்கொட்டை– 3 (உப்பில் ஊற வைத்து, காய வைத்தது)
புளி – சிறிதளவு
மல்லி விதை – 4 டீஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 6 டீஸ்பூன்
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறியது
மிளகாய் வற்றல் – 10
தாளிக்க
கடுகு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெந்நீரில் மாங்கொட்டைகளை போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். ஒரு கடாயில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், மல்லிவிதை இரண்டையும் வறுத்து, பின்னர் மிளகு, சீரகத்தைச் சேர்த்துக் கிளறி உடனே அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்.
அடுத்து இந்த கலவையை மிக்ஸியில் போட்டுஅரைக்கவும். இப்போது கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, கரைத்த புளி, உப்பு, வெல்லம், அரைத்த மசாலா சேர்க்கவும். இப்போது குழம்பு கொதி வந்ததும் மாங்கொட்டைகளைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் இறக்கவும். அவ்வளவு தான் மாம்பருப்பு வத்தக் குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“