இறுதி ஆண்டு மாணவி, ஓவியர், கிளாசிக்கல் டான்சர்... 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' வென்ற மனிகா விஸ்வகர்மா யார்?

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த மனிகா விஸ்வகர்மா வென்றார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவர் சென்ற ஆண்டு பட்டம் வென்ற ரியா சிங்காவிடமிருந்து மகுடத்தைப் பெற்றார்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த மனிகா விஸ்வகர்மா வென்றார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவர் சென்ற ஆண்டு பட்டம் வென்ற ரியா சிங்காவிடமிருந்து மகுடத்தைப் பெற்றார்.

author-image
WebDesk
New Update
Manika Vishwakarma

இறுதி ஆண்டு மாணவி, ஓவியர், கிளாசிக்கல் டான்சர்... 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' வென்ற மனிகா விஸ்வகர்மா யார்?

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த மனிகா விஸ்வகர்மா வென்றுள்ளார். ஆக.18 அன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற கோலாகலமான இறுதிப்போட்டியில், சென்ற ஆண்டு பட்டம் வென்ற ரியாசிங்கா, மனிகாவிற்கு மகுடம் சூட்டினார்.

Advertisment

ஜெய்ப்பூரில் 2வது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம், நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மனிகா விஸ்வகர்மா இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

மற்ற வெற்றியாளர்கள்:

முதல் ரன்னர்-அப்: உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தன்யா ஷர்மா.

இரண்டாவது ரன்னர்-அப்: மெஹக் திங்ரா.

மூன்றாவது ரன்னர்-அப்: ஹரியானாவைச் சேர்ந்த அமிஷி கௌசிக்.

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரை சேர்ந்த மனிகா, தற்போது டெல்லியில் வசித்துவருகிறார். அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் படிக்கும் இவர், கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான் பட்டத்தையும் வென்றார். மனிகா, நியூரோனோவா (Neuronova) என்ற தளத்தை நிறுவி நடத்தி வருகிறார். இது நரம்பியல் பன்முகத்தன்மை (neurodivergence) குறித்த உரையாடல்களை மறுவடிவமைக்க உதவுகிறது. மனிகா, ADHD போன்ற கோளாறுகளை பலவீனமாகக் கருதாமல், தனித்துவமான அறிவாற்றல் திறன்களாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

Advertisment
Advertisements

பல்வேறு திறமைகளைக் கொண்ட மனிகா, இதற்கு முன்பு வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நடைபெற்ற BIMSTEC Sewocon-ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் கலைஞர். லலித் கலா அகாடமி மற்றும் ஜே.ஜே. ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டவர். தேசிய மாணவர் படையின் (NCC) முன்னாள் மாணவரான இவர், சிறந்த பாரம்பரிய நடனக் கலைஞரும் ஓவியரும் ஆவார்.

மனிகாவின் உணர்வுப்பூர்வ பதிவு:

மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான் பட்டத்தை அடுத்தவருக்கு வழங்கிய அதே நாளில், தான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா இறுதிப் போட்டிக்கான தணிக்கையில் (auditions) பங்கேற்றதாக மனிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “ஒரு அத்தியாயம் முடிந்து, அதே நாளில் அடுத்த அத்தியாயம் தொடங்குவது தற்செயல் நிகழ்வு அல்ல. இது சீரான முன்னேற்றம். வளர்ச்சி என்பது ஓய்வுக்காக காத்திருக்காது என்பதை இது நினைவூட்டுகிறது,” என்று அவர் தனது பதிவில் உணர்வுபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: