Advertisment

மணிப்பூர் கலவரத்துக்கு நடுவே சிக்கித் தவிக்கும் ஒரு அழகான காதல்

மே 3 அன்று மாநிலத்தில் வன்முறை வெடித்ததால், பிரிந்து கிடக்கும் இரு சமூகங்களைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடியின் எதிர்காலம் நிச்சயமற்றதாகத் தெரிகிறது.

author-image
WebDesk
New Update
Manipur love story

Manipur love story

தயவு செய்து எப்படியாவது இதை அவளிடம் கொடுக்க முயற்சி செய்யுங்கள், என்று அந்த இளைஞர் இரண்டு கருப்பு பைகளை கொடுத்தார். ஒன்றில் நீண்ட காலம் நீடிக்கும் பிஸ்கட் மற்றும் உலர் கேக் போன்ற உணவுகளால் நிரம்பியிருந்தது, மற்றொரு பையில் போர்வைகள், சால்வைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தொலைபேசி சார்ஜர் இருந்தது.

Advertisment

சில நொடிகள் யோசித்த அவர், படுக்கை விரிப்புகளுக்கு இடையே இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வைத்தார். இது இங்கே இருக்கிறது என்று அவளிடம் சொல்லுங்கள். அவளிடம் பணம் எதுவும் இல்லை, என்று கூறினார்.

திங்கட்கிழமை காலை, 27 வயதான மெய்தி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், இந்த பிப்ரவரியில் இம்பாலில் தான் முதன்முதலில் சந்தித்த 20 வயது குக்கி பெண்ணிடம் கொடுப்பதற்காக இந்த இரண்டு பைகளையும் செய்தியாளர்களிடம் ஒப்படைத்து,

மே 3 அன்று மணிப்பூரின் சுராசந்த்பூரில் மெய்தி மக்களின் எஸ்.டி அந்தஸ்து கோரிக்கைக்கு எதிராக, பழங்குடியின மாணவர்களின் பேரணியின் போது வன்முறை வெடித்தது.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமைதியின்மை பரவியது. இதில்  கிட்டத்தட்ட 35,000 பேர் இடம்பெயர்ந்தனர் மற்றும் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்களைப் போலவே, அவளும் நகரத்தில் உள்ள ஐந்து நிவாரண முகாம்களில் ஒன்றிற்கு மாற்றப்பட்டாள். பிளவுபட்ட நகரம், உயர் பாதுகாப்பு நிவாரண முகாம்களில் செல்வதற்கு தடை மற்றும் இம்பாலுக்குள் நடமாடுவதற்கான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிய அவர், அவளுக்கு எப்படி உதவியை அனுப்புவது என்று தெரியாமல் இருந்தார்.

ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றும் இளைஞர், இம்பாலில் இருந்து ரிமோட் மூலம் வேலை செய்கிறார். அவள் நகரத்தின் பரபரப்பான சந்தை ஒன்றில் ஹோட்டலில் வேலை செய்கிறாள்.

இருவரும் இம்பாலில் உள்ள சிராவ் சிங் மலையில், மலையேற்றத்தின் போது சந்தித்தோம்.

குக்கி பெண்ணுடனான தனது காதலை பற்றி எனது பெற்றோருக்கும் தெரியும், மேலும் அவள் நலனில் தன்னைப் போலவே அவர்களும் அக்கறை கொண்டுள்ளனர்.

மே 3 அன்று நகரம் முழுவதும் வன்முறை பரவிய செய்தி அவளுக்குத் தெரிந்தபோது, ​​அவள் நண்பர்களுடன் உணவருந்துவதற்காக வெளியே சென்றிருந்தாள். நாங்கள் விரைந்து சென்று ஹோட்டலை அடைந்தோம், ஆனால் அதன் பிறகு வெளியேற முடியவில்லை. நான் அங்கு எனது நான்கு குக்கி நண்பர்கள் மற்றும் ஹோட்டல் சீனியர்களுடன் இருந்தேன், அவர்களில் பலர் மெய்தி இனத்தினர், என்று அவர் கூறினார்.

அவள் ஹோட்டலில் மாட்டிக்கொண்டதை சொல்ல அழைத்தபோது, அவளை மெய்தி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றேன், ஆபத்து குறையும் வரை அங்கு அவள் மறைந்திருக்கலாம் என்று நினைத்தேன்.

அன்று மாலை, நான் அவளுடைய தாயை என் வீட்டில் தங்க அனுமதி கேட்க அழைத்தேன். அவளுடைய அம்மா ஒப்புக்கொண்டார், ஆனால் அவளுடைய ஹோட்டல் சீனியர்கள் அவள் ஹோட்டலில் தங்குவது நல்லது என்று அறிவுறுத்தினர்.

அது பாதுகாப்பாக இருக்காது என்றும், நான் அவளைப் பாதுகாக்க முயற்சிப்பதை கும்பல் கண்டுபிடிக்கக்கூடும் என்றும் அவர்கள் சொன்னார்கள்.

அடுத்த நாள் காலை 7 மணியளவில் தனது காரில், ஹோட்டலுக்கு வந்த போது, ஹோட்டல் அதன் அதிகாரிகளால் பூட்டப்பட்டிருந்தது. அவளும் அவளுடைய நண்பர்களும் ஒரு நிவாரண முகாமின் பாதுகாப்பை அடைவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருந்தனர்.

குக்கி மாணவர்களின் அமைப்பு, பல நபர்களின் தொடர்பு எண்களை எங்களுக்கு வழங்கியது, ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியாக, எனது உறவினர் எம்.எல்.ஏ.வின் எண்ணைக் கொடுத்தார், அவர் எங்களை நிவாரண முகாமுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.

அவள் முகாமுக்கு சென்றவுடன், பேசுவது இன்னும் கொஞ்சம் கடினமாகிவிட்டது. தன் ஃபோன் சார்ஜரை மறந்துவிட்டதால், முகாமில் உள்ள மற்றவர்களிடம் மாறி மாறி கடன் வாங்க வேண்டியிருந்தது.

மற்ற காரணங்களும் இருந்தன. அவளுடைய சமூகத்தைச் சேர்ந்த நிறைய பேர் அங்கு தங்கியிருந்ததால் என்னுடன் பேசுவது அவளுக்குக் கொஞ்சம் கடினமாக இருந்தது. நாங்கள் பேசியது அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.

பின்னர் ஆயிரக்கணக்கானோர் ஒன்றாக தங்கியிருந்த முகாமில் உணவு, எந்தவொரு வசதியிலும் பற்றாக்குறை ஏற்பட்டது.

அவளுக்குப் பொருட்களை அனுப்புவதற்காக முகாமில் பணிபுரியும் ஒருவரைத் தொடர்புகொள்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க நான் தொடர்ந்து முயற்சித்தேன், ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பிறகு நான் உங்களைக் கண்டேன். நான் உங்களை விரைவில் சந்தித்திருக்க விரும்புகிறேன், என்று இளைஞர் கூறினார்.

திங்கட்கிழமை காலை இந்த பைகள் அவளிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று மதியம், இம்பாலில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி பகுதியில் பாதுகாப்பு துணையுடன் வாகனத்தில் சென்ற அவள் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தாள். அவள் இப்போது காங்போக்பியில் ஒரு நண்பரின் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

திங்களன்று,  இம்பாலில் இருந்து 64 கிமீ தொலைவில் உள்ள சுராசந்த்பூருக்கு பெரும்பாலான மக்கள் வெளியேற்றப்பட்டனர், அதேபோல் சுராசந்த்பூரில் இருந்தும் மக்கள் இம்பாலுக்கு வந்தனர். ஆனால் அன்று தனது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்ட 500-க்கும் மேற்பட்ட நபர்களில் அவளுக்கு இடம் கிடைக்கவில்லை.

நான் காத்திருக்க விரும்பவில்லை, ஆனால் முகாமை விட்டு வெளியேறுவதில் மகிழ்ச்சியடைந்தேன். நான் வீட்டில் இல்லாவிட்டாலும், என் பழங்குடி மக்களுடன் இருப்பதால் நான் நன்றாக உணர்கிறேன். … நிலைமை சாதாரணமானதும், நான் என் குடும்பத்துக்குத் திரும்பிச் செல்வேன், என்று அவர் கூறினார்.

உணவு மற்றும் பிற பொருட்களுக்கான பைகளை வழங்கியதற்கு எனது தாய்,  என் காதலனுக்கு செல்போனில் அழைத்து நன்றி தெரிவித்தார், என்றார்.

நீண்ட காலமாக ஒருவரையொருவர் பார்க்க வாய்ப்பில்லை என்பதை இந்த ஜோடி அறிந்திருக்கிறது.

அதே நேரம், மணிப்பூரில் இன்டர்நெட் தடைசெய்யப்பட்ட நிலையில், தனது முதலாளிகளிடம் நிலைமையை விளக்குவது கடினமாக இருப்பதால், மீண்டும் வேலையில் சேர இன்னும் சில நாட்களில் குவஹாத்திக்கு செல்ல இளைஞர் திட்டமிட்டுள்ளார்.

நாங்கள் மீண்டும் எப்போது சந்திப்போம் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் முகாமில் இருந்ததை விட அவளது தற்போதைய நிலைமை மிகவும் சிறப்பாக உள்ளது. அவள் இப்போது பாதுகாப்பான இடத்தில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது மிக முக்கியமான விஷயம், என்று இளைஞர் கூறினார்.

ஆனால் வீட்டை விட்டும், வேலை செய்த இடத்திலிருந்தும், நண்பர்கள் இருந்த இடத்திலிருந்தும் இடம்பெயர்ந்த அவளால் தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசிக்க முடியவில்லை.

“எனக்கு உண்மையில் தெரியாது. நான் தொலைந்துவிட்டேன், ”என்றாள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Manipur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment