கழிவறையில் 30 நிமிடங்கள் செல்போனில் கேம் விளையாடியவருக்கு நேர்ந்த கதி!

கழிவறையில் அமர்ந்துகொண்டு 30 நிமிடங்கள் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த நபருக்கு, மலக்குடலே வெளியே வந்துவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதெல்லாம் பெரும்பாலானோரால் செல்போன் இல்லாமல் இருக்க முடியவில்லை. எங்கு சென்றாலும் செல்போனுடன் தான் செல்வார்கள், கழிவறைக்கும் கூட. ஆனால், சீனாவில் நடைபெற்ற சம்பவத்தைக் கேள்விபட்டால் இனிமேல் அப்படி செய்ய மாட்டார்கள்!

சீனாவில், கழிவறையில் அமர்ந்துகொண்டு 30 நிமிடங்கள் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த நபருக்கு, அவரது மலக்குடலே வெளியே வந்துவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்நபர் மலக்குடல் இறக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் எனவும், அதனை சரிவர கவனிக்காமல் இருந்ததாலும், அத்துடன் மலம் கழிக்கும்போது 30 நிமிடங்கள் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாலும், பலவீனமடைந்து மலக்குடல் வெளியே வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

×Close
×Close