வழக்கமான முறையில் இட்லி செய்யாமல் மாப்பிளை சம்பா அரிசியில் இட்லி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் உளுந்து
மாப்பிளை சம்பா அரிசி 5 கப்
பச்சரிசி 1 கப்
செய்முறை
உளுந்தை 3 மணி நேரம் தனியாக ஊற வைக்க வேண்டும். மாப்பிளை சம்பா அரிசி, பச்சரிசி இரண்டையும் சேர்த்து 10 மணி நேரம் தனியாக ஊற வைக்கவும். முதலில் நாம் உளுந்தை அரைத்து எடுக்கவும். தொடர்ந்து மாப்பிளை சம்பா மற்றும் பச்சரிசியை சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து உளுந்தையும், மாப்பிளை சம்பா அரிசி அரைத்ததையும் சேர்த்து, உப்பு சேர்க்கவும். தொடர்ந்து இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றி வேக வைக்கவும்.