மரவள்ளிக் கிழங்கில் மொறு மொறு முறுக்கு செய்யலாமா! ரெசிபி இங்கே

மரவள்ளிக் கிழங்கு முறுக்கு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

மரவள்ளிக் கிழங்கு முறுக்கு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Maravalli kilangu.jpg

Maravalli kizhangu murukku

சுவையான, ஆரோக்கியமான மொறு மொறு முறுக்கு செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்

மரவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ 
பச்சரிசி மாவு - 1/4 கிலோ 
இஞ்சி - சிறிதளவு 
பச்சை மிளகாய் - 10 
ஓமம் - 2 டீஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 
வெண்ணெய்- 100 கிராம் 
உப்பு - தேவையான அளவு

செய்முறை 

Advertisment
Advertisements

இஞ்சி, பச்சை மிளகாய், ஓமம் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து மேல் தோலை நீக்கிவிட்டு துருவிக்கொள்ள வேண்டும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து மரவள்ளிக் கிழங்கு, அரிசி மாவு, அரைத்த விழுது, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். 

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிதமான தீயில் வைக்கவும். இப்போது முறுக்கு அச்சில் எண்ணெய் பூசி அதில் மாவைப்போட்டு முறுக்குகளாக எண்ணெய்யில் பிழிந்து விடவும். 

மொறு மொறு என்று சிவப்பு பதத்திற்கு வந்தவுடன் எடுக்கவும். அவ்வளவு தான் ஆரோக்கியமான, சுவையான மரவள்ளிக் கிழங்கு முறுக்கு தயார்.  குறிப்பு: கிழங்குகளை பயன்படுத்தி முறுக்கு தயாரிக்கும் போது. மாவு பிசைவதற்கு சுடு தண்ணீர் பயன்படுத்தலாம். இதனால் மாவு மென்மையாக இருப்பதுடன், எளிதில் பிசையவும் முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: