மார்கழி மாதத்தின் திருவாதிரை, சிறப்பானதொரு நாளாக போற்றப்படுகிறது. இந்தநாளில், வீடுகளில் பெண்கள் செய்கிற முக்கியமான வழிபாடு... மாங்கல்ய விரதம்.
Advertisment
மார்கழி திருவாதிரை நாளில், தாலிச்சரடு மாற்றிக்கொள்வது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
திருவாதிரை நோன்பு எந்த நாளில், எந்த நேரத்தில் நோர்க்க வேண்டும், இந்த நோன்பு இருப்பதால் நமக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் குறித்த பல தகவல்களை அனிதா குப்புசாமி தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
’சிவபெருமானுக்கு எத்தனையோ வழிபாடுகள், விரதங்கள் இருந்தால் கூட இந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை விரதம் தான் அவருக்கு மிகவும் பிடித்த விரதம்.
Advertisment
Advertisements
திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுடைய நட்சத்திரம். இதனால் மார்கழி மாதத்தில் பெளர்ணமி தினத்தில் திருவாதிரை நட்சத்திரமும் கூடுகிற நாளில்தான் திருவாதிரை விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.
சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன் ஆயுள் நீட்டித்து இருக்க வேண்டும் என்பதற்காக திருவாதிரை நோன்பு இருப்பார்கள். திருமண வரன் அமையாமல், தள்ளிக்கொண்டே போகும் ஆண்களும், பெண்களும் இந்த திருவாதிரை விரதத்தை மேற்கொள்ளலாம்.
திருவாதிரை நாளில் திருமணம் ஆன, ஆகாத பெண்கள் காலையில் எழுந்து தலையில் எண்ணெய் வைத்து மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும்.
பின்னர் பூஜையறையில் பார்வதி தேவியும், சிவபெருமானும் இணைந்து இருக்கக் கூடிய படத்தை எடுத்து சுத்தம் செய்துவிட்டு சந்தனம் குங்குமம் வைக்கவும். படத்துக்கு மலர்சூட்டவும். வில்வம் இலையும் சூட்டலாம். பின்னர் பிள்ளையார் பிடித்து வைக்கவும்.