வைரமுத்து தலைமையில் கல்யாணம்: மாரிமுத்து வாழ்க்கை பின்னணி
ஒருமுறை மாரிமுத்து கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது திருமணம், மனைவி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்….
பிரபல நடிகர் மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.
Advertisment
உதவி இயக்குனர், இயக்குனர், குணசித்திர நடிகர் என பல பரிமாணங்கள் இவருக்கு இருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம், இவரை தமிழகம் முழுவதும் உள்ள இல்லங்களில் கொண்டு போய் சேர்த்தது.
அவரது ’ஏய் இந்தாம்மா’ வசனம் குழந்தைகள் மத்தியில் கூட பிரபலம் ஆகியது. மாரிமுத்து திடீர் மறைவுக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒருமுறை மாரிமுத்து கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது திருமணம், மனைவி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்….
‘என் மனைவி பாக்கியலட்சுமி, இவ எனக்கு மனைவியா அமைஞ்சது நான் செய்ஞ்ச பாக்கியம். எங்களுக்கு கல்யாணம் ஆகி 27 வருஷம் ஆச்சு. 94ல போடியில கவிஞர் வைரமுத்து தலைமையில எங்களுக்கு திருமணம் நடந்தது. வைரமுத்து என்னோட குருநாதர், என்னோட தமிழ் ஆசான்..
அவர் வந்து தாலி எடுத்துக் கொடுத்தா தான் கல்யாணம் பண்ணுவேன், இல்லன்னா கல்யாணமே வேண்டாம் சொல்லிட்டேன்..
பாக்கியலட்சுமி என்னோட தாய்மாமா பொண்ணு. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்..
எனக்கு வர்ற பொண்டாட்டி ஒரு படிச்ச புள்ளயா, அறிவாளியா, ஸ்கூல்ல வேலை பாக்கிற பொண்ணா இருந்தா நல்ல இருக்கும் நினைச்சேன். ஆனா மாமா பொண்ணா அமைஞ்சுருச்சி.. நான் என்ன கற்பனையில இருந்தேனோ அதைவிட நல்ல பொண்டாட்டியா இருக்கா…
எங்க வீட்டுல நாங்க ரெண்டு பேரும்தான் சின்ன வயசுலயே சொல்லி வச்சுட்டாங்க..
நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது அவ 7வது படிச்சிட்டு இருந்தா. அப்போவே இவதான் என் பொண்டாட்டினு எனக்கு தெரியும்.
காதல் தப்பு இல்ல.. என் பொண்ணும், பையனும் லவ் பண்ணுவாங்களானு ஏங்குறேன்.. ரெண்டு பேரு கிட்டயும் லவ் பண்றீங்களா, சொல்லுங்க.. உடனே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் சொல்றேன்..
ரெண்டு பேரும் இல்லப்பா.. இல்லப்பானு சொல்றாங்க…
நான் ஜாதி பாக்கமாட்டேன், சாமி கும்பிட மாட்டேன். ஒருவேளை அரேஞ்சு மேரஜா இருந்தா நான் ரெண்டு பேருக்குமே வேற ஜாதியில தான் கல்யாணம் பண்ணுவேன்..
இளைஞர்களுக்கு என்னோட அறிவுரை, அப்பா அம்மா பேச்சை கேட்கக் கூடாது. அப்படி கேட்டா அப்பா அம்மாவத்தான் இருப்பாங்க. அதைவிட உயரத்துக்கு போக முடியாது. அப்பா, அம்மாவ யார் மீறுறாங்களோ அவங்க கண்டிப்பா ஜெயிப்பாங்க… ஆனா மீறி பாசிட்டிவ் ரூட்ல போயிடணும், ஒயின்ஷாப் பக்கம் போகக் கூடாது’, இப்படி பல விஷயங்களை மாரிமுத்து அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
மாரிமுத்து மறைவை தொடர்ந்து அவரின் இந்த வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்….
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.