/indian-express-tamil/media/media_files/2025/06/15/dwWaVawEuonvITf14wni.jpg)
வெட்டிங், பார்ட்டி பண்ண குட்டி தீவு: புதுச்சேரியில் இப்படியொரு தீவு இருக்கு தெரியுமா?
புதுச்சேரியில் ஒரு குட்டி தீவை வாடகைக்கு எடுக்கும் வசதி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? பீச் வெட்டிங், பார்ட்டி, கார்ப்ரேட் நிகழ்வுகளை நடத்த தீவை வாடகைக்கு எடுக்கும் வசதி உள்ளது. சுற்றுலாவுக்கு பெயர் போன புதுச்சேரியில் பல வசதிகள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அந்த வகையில் பீச் வெட்டிங், பார்ட்டி, கார்ப்பரேட் ஈவண்ட், கெட் டூ கெதர் போன்ற நிகழ்வுகளை கடற்கரையில் நடத்த தீவையே வாடகைக்கு எடுக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
புதுச்சேரியில் குட்டி தீவு போல் தனித்து இருக்கும் பாரடைஸ் பீச்சில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முறையான புக்கிங் செய்ய வேண்டும். படகு மூலம் நபர்கள் தீவாக பாரடைஸ் பீச்சில் பாதுகாப்பாக இறக்கி விடப்படுவர்கள். இதற்கு நபருக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நிகழ்வுகளுக்கு தேவையான பொருட்களையும் படகின் மூலம் கொண்டு செல்லலாம். உணவு ஏற்பாடுகளை நிர்வாகமே செய்து கொடுக்கும். பீச் வெட்டிங் செய்ய நினைப்பவர்கள், நண்பர்களுடன் பார்ட்டி, ஆபீஸ் கெட்டு டூ கெதர் மீட்டிங் நடத்த பெஸ்ட் ஸ்படாக இந்த பாரடைஸ் தீவு உள்ளது. சுண்ணாம்பாறு படகு குழாம் கீழ் இந்த புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்றும் டிக்கெட் பெறலாம். காலை 9 முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. 50 பேர் முதல் 500 வரை இங்கு தங்கலாம்.
புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளது. சுண்ணாம்பாற்றில் பயணம் செய்வது கடலில் செல்வது போன்ற உணர்வைத் தரும். பயணத்தின் முடிவில் அழகான தீவு போல காட்சியளிக்கும் பாரடைஸ் பீச்சை அடையலாம். கடற்கரைப்பகுதி மணல் வெளி ரம்மியமான சூழலை அளிக்கும். இந்த பகுதியைப் பார்க்கும்போதே வெளிநாட்டில் இருப்பதை போன்ற உணர்வு மேலிடும். இங்கு நீர் விளையாட்டுகள் பல உள்ளதால் சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற இடம். அமைதி மற்றும் பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து நிம்மதியாக தப்பிக்க விரும்புபவர்களுக்கு பாரடைஸ் பீச் ஒரு பிரபலமான இடம்.
கடற்கரையில் குதிரை சவாரி, மழை நடனம், மணலில் ஸ்கூட்டர் சவாரி போன்ற சில வேடிக்கையான சவாரிகள் உள்ளன. மேலும், ஜெட்ஸ்கி, ரிங் பால், கைப்பந்து போன்ற நீர் விளையாட்டுகளையும் நீங்கள் இவை தவிர, படகில் ஏறுவதற்கு முன், இலக்கு சுடுதல், டம்ளர் எறிதல் போன்ற வழக்கமான செயல்பாடுகளை நுழைவாயிலில் அணுகலாம்.
சுண்ணாம்பாறு படகு இல்லத்தில், காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை, பாரடைஸ் தீவுக்கு படகுப் பயணங்கள் இயக்கப்படுகின்றன. அரை மணி நேரத்தில் இந்தத் தீவை அடையலாம். தோராயமாக ஒரு நபருக்கு ரூ.300- ரூ.500 வரை செலவாகலாம். நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை, வெயில் மற்றும் மழை அதிகம் இல்லாத மாதங்களில் பாரடைஸ் தீவுக்கு சென்று வரலாம்.
அடர்ந்த பச்சை சதுப்புநிலக் காடுகளைக் கொண்ட உப்பங்கழிகள் வழியாக கடற்கரையை அடைவது ஒரு மகிழ்ச்சியான விஷயம். குறிப்பாக மழைக்காலத்திற்குப் பிறகு, உப்பங்கழி புதியதாகவும் பசுமையாகவும் இருக்கும். சவாரி செய்யும் போது நீங்கள் நிறைய பறவைகளைக் காணலாம், மேலும் புகைப்பட ஆர்வலர்கள் இங்கே சில சிறந்த புகைப்படங்களை எடுக்கும் வாய்ப்பை அனுபவிப்பார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.