செம்ம சுவையான பருப்பு மசாலா வடை, சுத்தமாக எண்ணெய் குடிக்காது. ஒரு முறை இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
1 கப் கடலை பருப்பு
6 குண்டு வத்தல்
சீரகம் 1 அரை ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
5 பூண்டு
பொறிக்கும் அளவு எண்ணெய்
1 வெங்காயம் நறுக்கியது
பச்சை மிளகாய் 3 நறுக்கியது
2 கைப்பிடி புதினா- கொத்தமல்லி
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை : கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதில் ஒரு கைபிடி கடலை பருப்பை தனியாக எடுத்து வைக்கவும். மிக்ஸியில் ஊற வைத்த கடலை பருப்பு, சீரகம், வத்தல், இஞ்சி , பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது, புதினா- கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடானதும் பருப்பு மசாலா வடை போட்டு பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“