டீ அல்லது சாய், இந்தியாவில் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். ஏறக்குறைய அனைவரது வீட்டிலும் ருசிக்கப்படும், தேநீர் மட்டும் இல்லையென்றால் வாழ்க்கை முழுமையாக நிறைவடையாது
குறிப்பாக குளிர்காலத்தில் டீ வேண்டாம் என்று யாரால் சொல்ல முடியும்? எனவே நீங்கள் மசாலா டீயுடன் உங்கள் வாரத்தை ஆரம்பிக்க விரும்பினால், முழு இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் வலுவான தேயிலை இலைகளின் நன்மதிப்புடன், நாங்கள் அதை உங்களுக்கு வழங்குகிறோம்.
செஃப் பங்கஜ் பதூரியா, 10 நிமிடங்களுக்குள் நீங்கள் செய்யக்கூடிய மிக எளிதான மசாலா டீ செய்முறையைப் பகிர்ந்துள்ளார். பாருங்கள்:
தேவையான பொருட்கள்
*சுக்கு
*ஏலக்காய்
*கருமிளகு
* பெருஞ்சீரகம்
* இலவங்கப்பட்டை
செய்முறை
காய்ந்த மிக்சி ஜாரில், மேலே கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதை காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் சமயங்களில் எடுத்து உபயோகிக்கலாம்.
சிறந்த மசாலா டீ எப்படி செய்வது?
தண்ணீர் சூடாகி, கொதி நிலைக்கு வந்தவுடன் அடுப்பை சிம்-ல் வைக்கவும்.
அதில் 2 ஸ்பூன் தேயிலை, 1 ஸ்பூன் ஏற்கெனவே அரைத்த சாய் மசாலா பொடி, மற்றும் சர்க்கரயை சேர்க்கவும்.
அதில் ஒரு கப் பால் சேர்த்து, சிம்-ல் 3-4 நிமிடங்களுக்கு, பானத்தின் நிறம் மாறும் வரை கொதிக்க விடவும்.
இப்போது அருமையான மசாலா டீ தயார். அதை வடிகட்டி, பக்கோடாவுடன் சூடாக பரிமாறுங்கள்.
இது உங்கள் இதயத்தின் அறைகளை சூடேற்றுவது மட்டுமல்லாமல், மசாலாப் பொருட்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் நேரம், சந்தைக்கு செல்வது, அலுவலக இடைவேளை அல்லது விருந்தினர் வீட்டிற்கு வரும்போதெல்லாம், ஒரு கப் தேநீர் உரையாடலை எளிதாக்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“