இதை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்க. செம்ம ருசியா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பட்டணி 1 கப்
3 உருளைக்கிழங்கு
2 வெங்காயம்
2 தக்காளி
1 கைபிடி புதினா
1 கைபிடி கொத்தமல்லி
4 பச்சை மிளகாய்
போட்டுக் கடலை 2 ஸ்பூன்
1 டீஸ்பூன் சோம்பு
எண்ணெய்
உப்பு,
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் மல்லித் தூள்
அரை ஸ்பூன் கரம் மசாலா
கால் ஸ்பூன் சாட் மசாலா
பானி பூரிகள் 6 முதல் 8
கான்பிளக்ஸ்
துருவிய தேங்காய் 1 டேபிள் ஸ்பூன்
2 ஸ்பூன் பொரி
செய்முறை: பட்டாணியை இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்து கொள்ளவும். ஊறவைத்த பட்டணி உருளைக்கிழங்கை சேர்த்து வேக விடவும். வெந்த உருளைக்கிழங்கு தோல் நீக்கி பட்டணியுடன் மசித்து கொள்ளுங்கள். மிக்ஸியில் வெங்காயம் நறுக்கியது, தக்காளி, புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில், அரைத்த விழுதை சேர்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா சேர்த்து கிளரவும். இதில் வேகவைத்த பட்டாணி கலவையை சேர்க்கவும்.. உப்பு சேர்க்கவும். தற்போது கிளரவும். அடுப்பை அனைத்து விட்டு, உடைத்த பானி புரிகளுக்கு மேல் இதை ஊற்ற வேண்டும். அதற்கு மேல் வெங்காயம், துருவிய கேரட், பொரி, கான்பிளக்ஸ் சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“