எல்லா மாதங்களில் உள்ள பெளர்ணமி சிறப்புடையது. மாசு மாதத்தில் பெளர்ணமியுடன் மகம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளை தான் மாசி மகம் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
மாசி மகத்திற்கு பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். இதுபோல கோவிலுக்கு பூஜை செய்யலாம்.
2024ம் ஆண்டுக்கான மாசி மகம் திருவிழா 24 பிப்ரவரி 2024 சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி 23ம் தேதி மாலை 4.55 மணிக்கு தொடங்கி, பிப்ரவரி 25ம் தேதி மாலை 6.51 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. மகம் நட்சத்திர பிப்ரவரி 23ம் தேதி இரவு 8.40 மணிக்கு தொடங்கி, பிப்ரவரி 24ம் தேதி 11.04 மணி வரை செல்லும்.
இதனால் 24ம் தேதி காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும் கடல், குளத்திற்கு சென்று புனித நீராடலாம். அப்படி அங்கு செல்ல முடியவில்லை என்றால், விரதம் இருந்து பார்வதியையும் சிவபெருமானையும் வழிபட்டு, முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கலாம்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மாசி மகம் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த நாளில் பார்வதி மற்றும் சிவனை வழிப்படுவது போல் நாம் முருகனையும் வழிபடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“