பொதுவாகவே பெளர்ணமி நாள் சிவபெருமான், முருகனை வழிபடும் நாளாக இருக்கிறது. இதில் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் பெளர்ணமி மிகவும் விசேஷமானது. இந்த நாட்களில் விரதம் இருந்து வழிபட்டால் மிக உயர்ந்த புன்னியம் செய்வதற்கு ஈடாகும்.
தை மாதத்தில் வரும் பெளர்ணமி நாளில் தை பூசம் கொண்டாடுகிறோம். மாசி மாதம் பெளர்ணமியில் மாசிமகம் கொண்டாடுகிறோம். பங்குனி மாதத்தில் வருகின்ற பெளர்ணமி பங்குனி உத்திரமாகவும். சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமி சித்திரா பெளர்ணமி என்றும் கார்த்திகை மாத பெளர்ணமி கார்த்திகை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த பெளர்ணமி நாட்களில் நாம் வேண்டியதை நினைத்து வழிபட்டால் அது அப்படியே நடக்கும். மாசி மாதத்தில் பெளர்ணமியுடன் மகம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளை மாசி மகம் திருவிழாவாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் பல கோவில்களில் தீர்த்த உச்சவம் நடைபெறுவது வழக்கம்.
குறிப்பாக சாதகத்தில் சில தோஷங்கள் இருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் உள்ளவர்கள் புன்னிய நதியில் நீராடி வந்தால் தோஷம் நீங்கும்.
இந்த மாசிமகத்தில்தான் அனைத்து நீர் நிலைகளிலும் கங்கை கலந்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் மாசி மகத்தில் நீராட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. 12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த நாளில் இந்தியாவில் உள்ள 12 நதிகளில் நீராடலாம். இதுபோல தமிழகத்தில் உள்ள கும்பகோணத்தில் உள்ள கும்பேஷரர் கோவிலில் மக்கள் வந்து நீராடுவார்கள்.
இந்த நாளை கும்பகோணம் மகாமகம் திருவிழாவாக கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் இது கும்பமேளாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மாசிமகப் பெருவிழா பிப்ரவரி 24 தேதி வருகிறது. பிப்ரவரி 23ம் தேதி மாலை 4.55 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 25ம் தேதி மாலை அதிகாலை 6.51 வரை பெளர்ணமி திதியும். பிப்ரவரி 23ம் தேதி இரவி 8.40 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது. இதனால் பிப்ரவரி 14ம் தேதி காலை முதல் மாலை வரை எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்.
அப்படி புனித நீராட முடியவில்லை என்றால் வீட்டில் விரதம் இருந்து சிவனையும் பார்வதியையும் வேண்டலாம். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்பணம் அளிப்பதால் 7 ஜென்ம பாவம் தீரும். இந்த நாளில் பெருமாலையும் வழிபாடு செய்ய வேண்டும். சொந்த வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள் வராகப் பெருமாளை வழிபாடு செய்யலாம்.
அதற்கு ஒரு கலச செம்பில் சுத்தமான நீர், பச்சை கற்பூரம், துளசி, வில்வம், விபூதி, மலர் போட்டு புனித நீராடலாம். குலதெய்வதற்கு விளக்கேற்றி பூஜை செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“