தோல் பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இல்லை. அதனால்தான், ஏதேனும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே, பியூட்டி இன்ஃபுளுயன்சர் சேஜல் கோயலின் DIY தீர்வைக் கண்டபோது, அது உண்மையிலேயே செயல்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினோம்.
’எனக்கு நல்ல நிறம் பிடிக்கும். ஆனால் வயதாகும்போது, அது சாம்பல் நிறமாக மாறத் தொடங்குகிறது, இதனால் என் தோல் மிகவும் மந்தமாக இருக்கும். இந்த ஸ்க்ரப் நீங்கள் இறந்த சரும செல்களை அகற்றி, உங்கள் சருமத்தை பிரகாசமாக்க விரும்பினால், இந்த ஸ்க்ரப் முயற்சிக்கவும்’, என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
3 டீஸ்பூன் - சிவப்பு மசூர் பருப்பு, மைய அரைத்தது
2 டீஸ்பூன் – அரைத்த அரிசி பேஸ்ட்
2 டீஸ்பூன் – தக்காளி பேஸ்ட்
3 டீஸ்பூன் – பால்
ஒரு கிண்ணத்தில் அனைத்தையும் கலந்து உங்கள் உடலில் தடவவும். சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும், உங்கள் முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் கவனம் செலுத்துங்கள். சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும், சோப்பு தேவையில்லை. நீங்கள் சோப்புப் பயன்படுத்த விரும்பினால், அதுவும் நல்லது.
/indian-express-tamil/media/media_files/o9QqxPbpN5IMFbZwW9YG.jpg)
இந்த ஸ்க்ரப்பை சேமித்து வைக்காதீர்கள், ஏனெனில், அது மிக வேகமாக கெட்டுவிடும். அதை தயாரித்த உடனே பயன்படுத்துங்கள்! என்று கோயல் பகிர்ந்து கொண்டார்.
ஸ்கின் எக்ஸ்ஃபாலியேஷன் தோல் நிறத்தை மேம்படுத்துகிறது, இது செல் சுழற்சியை ஊக்குவிக்கிறது மற்றும் டேன் நீக்க உதவுகிறது என்று டாக்டர் வந்தனா பஞ்சாபி (dermatologist and trichologist at Khar, and Nanavati Max Superspeciality Hospital) கூறினார்.
இதை 2 வழிகளில் செய்யலாம்
கெமிக்கல் எக்ஸ்ஃபாலியேஷன் என்பது கிளைகோலிக் அமிலம், லாக்டிக் அமிலம், யூரியா, ரெட்டினோல் போன்றவற்றை பயன்படுத்துவதை உள்ளடக்குகிறது. அதேசமயம் பிசிகல் எக்ஸ்ஃபாலியேஷன் என்பது OTC ஸ்க்ரப் அல்லது ஹோம்மேட் ஸ்க்ரப் மூலம் சருமத்தை ஸ்க்ரப்பிங் செய்வதாகும்.
பலர் ஹோம்மேட் ஸ்க்ரப் பயன்படுத்துகின்றனர், அவை தோலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன, குறிப்பாக தோலின் நிறத்தில். இதற்கு ஸ்க்ரப்பில் உள்ள கரடுமுரடான துகள்கள், மெலனோசைட்டுகளுக்கு சேதம் விளைவித்து, தோல் நிறமியை அதிகரிக்கச் செய்யும்.
இது ஹைப்பர் பிக்மென்ட் பகுதிகளை உருவாக்குகிறது.
எனவே எந்தவொரு ஸ்க்ரப்பையும், ஒரு பேட்ச் சோதனைக்குப் பிறகு எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும், என்று டாக்டர் பஞ்சாபி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
Read in English: Can a DIY scrub made with masoor dal help you detan?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“