New Update
00:00
/ 00:00
மாப்பிளை சம்பா வைத்து மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷலாக செய்யும் சாம்பார் சாதத்தை நீங்களும் செய்யலாம்.
தேவையானபொருட்கள்
1 கப் மாப்பிளை சம்பா
அரை கப் பருப்பு
கொஞ்சம் புளி
சின்ன வெங்காயம் 10
5 வெண்டைக்காய்
3 பூண்டு
2 கேரட்
2 பீன்ஸ்
2 அவரைக்காய்
1 கத்திரிக்காய்
1 உருளைக்கிழங்கு
2 தக்காளி
2 ஸ்பூன் எண்ணெய்
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் மல்லிப் பொடி
அரை ஸ்பூன் சாம்பார் பொடி
செய்முறை: மாப்பிளை சம்பா அரிசியை கழுவி, 4 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து பருப்பை ஊற வைக்கவும். தொடர்ந்து இதை குக்கரில் சேர்த்து 6 கிளாஸ் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து கிளரவும். நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து கிளரவும். புளி தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். தொடரந்து குக்கரில் அவித்த சாதம் பருப்பை சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.