விவசாயிகளின் நண்பனுக்கு இன்று பொங்கல்... மாட்டு பொங்கல்... ஒரு ஸ்பெஷல் பார்வை

Mattu Pongal 2019, Interesting Facts About Mattu Pongal : கடவுளுக்கு நிகராகவும் குடும்பத்தில் ஒருவராகவும் விவசாயிகள் கருதுவது அவர்கள் ஆசையாக வளர்த்த கால்நடைகளே.

Mattu Pongal 2019, Second Day of the Pongal Festival : பொங்கல் தமிழர் பண்டிகையில் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இது போகியில் துவங்கி காணும்பொங்கலை இறுதி நாளாக கொண்டது.

பொங்கலன்று அனைத்திற்கும் அடிப்படையான சூரியனுக்கு பொங்கலிடுவார்கள். அதே போல், அதற்கு அடுத்த நாள், உழவு தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு பொங்கலிடுவார்கள். இங்கு மாட்டு பொங்கல் வைப்பதற்கான சிறந்த நேரம் பற்றி பார்க்கலாம்.

Mattu Pongal 2019 :  மாட்டு பொங்கல்

உழவர்களின் நண்பனாக இருக்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறி மதிப்பளிக்கும் நாளே மாட்டுப் பொங்கல். இது பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது.

பசுக்களை கடவுளின் மறு அவதாரமாக கருதுவதாலும், உழவுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கும், வீட்டில் ஒருவராய் வளர்ப்பதாலும் அவற்றிற்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிடுகின்றனர்.

மாட்டு பொங்கல் கொண்டாட்டத்தின் என்ன செய்ய வேண்டும்

  • மாட்டுப் பொங்கலன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினை சுத்தம் செய்து, கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, கொம்புகளை சீவி விட வேண்டும்.
  • மாடுகளின் கொம்புகள் பளபளப்பாக தெரியும் வகையில் வண்ணங்கள் பூசி அழகுப்படுத்துங்கள்.
  • கொம்பில் மணிகள், சலங்கைகள் அல்லது தோலாலான வார் பட்டையில் சலங்கைகளை கட்டி அவற்றை மாடுகளுக்கு அணிவித்து அலங்காரம் செய்யுங்கள்.
  • பின்பு மாட்டிற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தால் திலகமிட்டு, மூக்கில் இருக்கும் கயிறு மற்றும் கழுத்தில் அணிவிக்கும் கயிறு போன்றவற்றை மாட்டிற்கு அணிவித்து பூஜை செய்யவும்.

மாட்டு பொங்கல் விவசாயிகளின் முக்கிய வழிபாடு

உழவுக்கு பயன்படுத்தும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைப்பார்கள். அந்த வருடத்தில் விளைந்த பயிர், காய்கறிகளுடன் தேங்காய், பூ, பழம், நாட்டு சர்க்கரை என அனைத்தும் பூஜைக்காக வைப்பார்கள்.

தொழுவதிலேயே பொங்கல் வைத்து, அதை கடவுளுக்கு படைத்தது தீபாராதனை காட்டுவார்கள். பின், மாடு, ஆடு மற்றும் எருமை போன்ற கால்நடைகளுக்கு பொங்கல் மற்றும் பழம் கொடுப்பார்கள். இது விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கு நன்று கூறும் விதமாக கொண்டாடுகிறார்கள்.

3 நாட்கள் கோலாகலமாக கொண்டாடும் பொங்கல் பண்டிகையில், இரண்டாம் நாளான மாட்டு பொங்கலை மட்டும் ஒரு போதும் விவசாயிகள் கொண்டாட மறப்பதில்லை. ஏனெனில், சூரிய கடவுள், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கடவுளுக்கு நிகராகவும் குடும்பத்தில் ஒருவராகவும் விவசாயிகள் கருதுவது அவர்கள் ஆசையாக வளர்த்த கால்நடைகளே.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close