கிராம்பின் மருத்துவ பயன்கள்!

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கிராம்பின் மருத்துவ பயன்கள்!

கிராம்பு எண்ணெய் ஒரு சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. குறிப்பாக எறும்பு மற்றும் அந்துப் பூச்சிகளை விரட்டுகிறது. எனவே உங்கள் அலமாரிகள் போன்றவற்றில் இந்த பூச்சிகளின் தொந்தரவு ஏற்பட்டால் சில கிராம்பு களை ஒரு காட்டன் துணியில் கட்டி போட்டு விட்டால் போதும் பூச்சிகள் எல்லாம் ஓடிவிடும்.

Advertisment

கிராம்பு சீரண என்ஜைம்களை அதிகரித்து சீரண சக்தியை தூண்டுகிறது. வாய்வு, நெஞ்செரிச்சல், குமட்டல், எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது.

காலரா தண்ணீரால் பரவக் கூடிய நோயாகும். இதனால் பேதி, வாந்தி மற்றும் இறப்பு கூட ஏற்படலாம். கிராம்பு,  பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறது. அதிலும் காலரா பாக்டீரியாவிற்கு எதிராக செயல்பட்டு அதன் விளைவை குறைக்கிறது.

கிராம்பில் உள்ள கூட்டுப்பொருளான பினைல்புரப்போனைடு பொருட்கள் ஆன்டி மியூட்டோஜெனிக் தன்மையை கொண்டுள்ளன. இது செல்களின் மரபணு பிறழ்வுகளை தடுத்து கேன்சர் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.

Advertisment
Advertisements

நுரையீரல் புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய கிராம்பு பயன்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.

உணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஏனெனில் கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் அதிகம் எதிர்ப்பு சக்தியை கொடுப்பவை. உங்கள் உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பது இவர்களுடைய முக்கிய வேலையாகும். இது நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது.  எனவே கிராம்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அழற்சி கிருமிகளிலிருந்து நம்மை காக்கிறது.

பல்வலி, பற் சொத்தை போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவராக விளங்குகிறது. இதில் உள்ள யூஜினால் வலி நிவாரணி மற்றும் ஆண்டி அழற்சி பொருட்கள் இதற்கு துணை புரிகின்றன. மேலும் பற்களை ஒரு சிமெண்ட் போன்று காக்கிறது.

தலைவலி ஏற்பட்டால் கிராம்பை பொடியாக்கி பேஸ்ட் செய்து அதனுடன் ராக் சால்ட் சேர்த்து பாலுடன் கலந்து குடித்தால் போதும், உடனடியாக தலைவலி தீரும்.

Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: