கொய்யா பழத்தால் நமது உடலுக்கு கிடைக்கும் சத்துகள் மற்றும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
கொய்யாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், உடலின் இயற்கையான பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் தொற்று மற்றும் பொதுவான நோய்கள் ஏற்படும் அபாயங்களை தடுக்க உதவுகிறது.
கொய்யா பழங்கள் லோ -கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளது. எனவே, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இந்த பழம் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்க ஒரு சிறந்த மருந்தாகவும் அமைகிறது.
வைட்டமின் சி நிறைந்த கொய்யா பழம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் சருமம் ஆரோக்கியமாக, இளமையாக இருக்க ஊக்குவிக்கிறது. மேலும், சருமத்தில் சுருக்கங்களைக் குறைக்கிறது. கொய்யா பழங்கள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
கொய்யா பழங்களில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவி செய்கிறது. பார்வைக் குறைபாட்டை தடுக்கிறது. மேலும், கண்புரை அபாயத்தையும் குறைக்கிறது.
சிவப்பு கொய்யா பழங்களில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“