மாரடைப்பு முதல் தொப்பை வரை பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்ததாக கருஞ்சீரகம் பார்க்கபடுகிறது. இதன் மருத்துவ பயன்களை மருத்துவர் ஆஷா லெனின் கூறுகிறார்.
பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகம் அருமருந்தாக விளங்குவதாக மருத்துவர் ஆஷா லெனின் கூறுகிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ள மருத்துவ தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
இரவில் கருஞ்சீரகத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் தொப்பை குறையுமென அவர் கூறுகிறார். மரணத்தை தவிர மற்ற அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு இதில் மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆஷா லெனின் தெரிவித்துள்ளார்.
தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக, கருஞ்சீரகத்தை வறுத்து பொடியாக்கி, அதனை தேனுடன் கலந்து சாப்பிட அவர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி. 1-2 கிராம் வரை இதனை உட்கொள்ளலாம். கை, கால்களில் லேசான எரிச்சல் ஏற்பட தொடங்கினால், இதனை சாப்பிடுவதை தவிர்த்து விடலாம் என ஆஷா லெனின் பரிந்துரைக்கிறார்.
கணையத்தில் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலும் குணப்படுத்தவும், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்தவும் கருஞ்சீரகம் உதவுவதாக கூறப்படுகிறது. 100 கிராம் அளவிற்கு கருஞ்சீரகம், வெந்தயம், 50 கிராம் அளவிற்கு ஓமம் ஆகியவற்றை பொடியாக்கி ஒரு டேபிள்ஸ்பூன் அளவில், கால் கிளாஸ் நீரில் கலந்து குடித்தால், உடலக்கு நன்மை ஏற்படுமென அவர் கூறியுள்ளார். மேலும் கருஞ்சீரகம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“