பெரும்பாலும் சரும நோய்கள் ஏற்படாமல் எல்லோருமே கவனமாக இருப்பார்கள். அதையும் மீறி சிலருக்கு சரும பிரச்சனைகள் ஏற்பட்டு விடும். அப்படி சரும பிரச்சனைகளுக்கு பூவரசன் மூலம் தீர்வு காணலாம் எனக் கூறப்படுகிறது.
பூவரசம் மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய காயை, மஞ்சள் உரசுவது போல் உரசினாலோ அல்லது இடித்து அறைத்தாலோ அதிலிருந்து ஒரு திரவம் உருவாகும். இந்த திரவத்தை தேமல் இருக்கும் இடத்தில் நாம் தினமும் தடவினால், தேமல் முற்றிலும் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
சொரி சிரங்கு, கருந்தேம்பல், படர்தாமரை என பல சரும பிரச்சனைகளுக்கு இந்த முறை பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. தினமும் தொடர்ச்சியாக இதை தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பிறகு முகத்தை கழுவிக் கொள்ளலாம்.
சிலருக்கு செயின் போட்டு கழுத்தில் கருமை ஏற்பட்டிருக்கும். அந்த கருமையை நீக்குவதற்கும் இந்த திரவம் உதவுகிறது. இதை நாம் தொடர்ச்சியாக தடவுவதன் மூலம் அந்த கருமை நீங்கி நம்முடைய இயற்கையான சரும நிறம் வெளிப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“